செய்திகள் :

எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா? - சட்டம் சொல்வது என்ன? - 12

post image

“எல்லா மீனும் இருக்கு... ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம்!” வடிவேலுவின் இந்தக் காமெடியைப் பார்த்து நாம் சிரித்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஜாமீன் என்பது ஒருவரின் சுதந்திரத்துடன் தொடர்புடைய முக்கியமான சட்ட நடைமுறை!

ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலே கைது செய்யப்படுவாரா? கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்குமா? தெரிந்துகொள்வோம்!

ஜாமீன் கிடைத்தால் வழக்கிலிருந்து விடுதலையா?

இல்லை! வழக்கு விசாரணை நடைபெறும் காலத்திலோ அல்லது சட்டப்படி வேறு பொருத்தமான நிலையிலோ, விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு காவலிலிருந்து வெளியே இருக்க அனுமதிப்பதுதான் ஜாமீன். ஜாமீன் கிடைத்துவிட்டால் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை என்று அர்த்தமல்ல.

எல்லாக் குற்றங்களுக்கும் ஜாமீன் கிடைக்குமா?

குற்றங்கள் ஜாமீனில் வெளிவரக்கூடியவை (Bailable), ஜாமீனில் வெளிவர முடியாதவை (Non-bailable) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்களில், சட்டப்படி ஜாமீன் வழங்கப்படுவது உரிமையாகும். இதை BNSS பிரிவு 478 குறிப்பிடுகிறது.

சட்டம் சொல்வது என்ன?

ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களில் (Non-bailable offences), ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தின் விருப்ப அதிகாரத்திற்கு உட்பட்டது; ஆனால் அது தன்னிச்சையான அதிகாரம் அல்ல. குற்றத்தின் தீவிரம், கிடைக்கும் ஆதாரங்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர் தலைமறைவாகும் வாய்ப்பு, சாட்சிகளைப் பாதிக்கும் அபாயம் மற்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற நிபந்தனைகளைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்.

இதற்கான முக்கியமான சட்டப்பிரிவு BNSS பிரிவு 480.

கைது செய்வதற்கு முன்பே ஜாமீன் பெற முடியுமா?

அரசியல்வாதிகள், பிரபலங்கள் “முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்” என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.

ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம் என்ற நியாயமான அச்சம் இருந்தால், சட்டத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்ஜாமீன் (Anticipatory Bail) கோரலாம். இதற்கான சட்டப் பிரிவு BNSS 482. இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல; தகுதியுள்ள யாரும் கோரலாம். எனினும், எல்லா குற்றங்களிலும் முன்ஜாமீன் கோர முடியாது. குறிப்பாக, BNS பிரிவுகள் 65 மற்றும் 70(2)-ன் கீழ் வரும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு BNSS பிரிவு 482-ல் விதிவிலக்கு உள்ளது

தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போடணுமா?

ஜாமீனில் வெளியே வந்தவர் தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கையெழுத்துப் போடுவதைச் சினிமாவிலும் செய்திகளிலும் பார்த்திருப்போம். ஆனால், இந்த நிபந்தனை எல்லோருக்கும் விதிக்கப்படாது.

வழக்கைப் பொறுத்து, குறிப்பிட்ட நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளை மிரட்டக் கூடாது போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் விதிக்கலாம்.

இந்த நிபந்தனைகளை மீறினால், சூழ்நிலையைப் பொறுத்து ஜாமீனை ரத்து செய்யக் கோரி உரிய நீதிமன்றத்தை அணுகலாம். BNSS பிரிவு 483-ன்படி, உயர் நீதிமன்றத்துக்கும் (High Court), செஷன்ஸ் நீதிமன்றத்துக்கும் (Court of Session) ஜாமீன் வழங்கவும், மாஜிஸ்திரேட் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை மாற்றவோ நீக்கவோ அதிகாரம் உண்டு. ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நபரை மீண்டும் காவலில் வைக்கவும் உரிய சட்ட நடைமுறைக்கு உட்பட்டு உத்தரவிட முடியும் .

சட்டம் சொல்வது என்ன?

உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

State of Rajasthan v. Balchand (1977) வழக்கில், உச்ச நீதிமன்றம் “Bail, not jail” என்ற கோட்பாட்டை வலியுறுத்தியது. அதாவது, ஜாமீன் தொடர்பான முடிவுகளில், தேவையற்ற சிறைவாசத்தைத் தவிர்த்து, தனிநபர் சுதந்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எனினும், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் கிடைக்கும் என்று இதற்குப் பொருளல்ல. தலைமறைவாகும் அபாயம், சாட்சிகளை மிரட்டும் வாய்ப்பு, மீண்டும் குற்றம் செய்வதற்கான சாத்தியம் போன்ற காரணிகளையும் நீதிமன்றம் பரிசீலிக்கும்.

நினைவில் வையுங்கள்! ஜாமீன் கிடைத்தால் குற்றமற்றவர் என்று அர்த்தமல்ல; ஜாமீன் மறுக்கப்பட்டால் குற்றவாளி என்றும் அர்த்தமல்ல. குற்றம் நிரூபிக்கப்படுகிறதா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும்.

ஜாமீன் என்பது விடுதலை அல்ல; விசாரணையைச் சிறைக்கு வெளியே இருந்து எதிர்கொள்ளக் கிடைக்கும் சட்ட வாய்ப்பு!

திருப்பரங்குன்றம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை எதிர்த்து தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவ்லியா தர்கா த... மேலும் பார்க்க

கல்வி சலுகை அல்ல... உரிமை! பள்ளியில் சேர்க்க மறுத்தால்.! - சட்டம் சொல்வது என்ன? - 11

படிக்க வைக்கிறது உங்க கடமை மட்டுமல்ல… குழந்தையின் உரிமையும்!“நான் உன்னைப் பத்து மாசம் சுமந்து, எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைக்கிறேன் தெரியுமா?”குழந்தைகள் படிக்காமல் விளையாடும்போது, பல வீடுகள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றாத மும்பை மாநகராட்சி; கமிஷனரின் சம்பளத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி

மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவலி என்ற இடத்தில் மாநகராட்சி பஸ் நிறுத்ததிற்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி, மகன்கள் உட்பட 7 பேரும் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராகப் பதவி... மேலும் பார்க்க

"கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்" - சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத... மேலும் பார்க்க

`வேலை பறிபோனால் என்ன செய்யலாம்? உங்கள் உரிமைகள் என்னென்ன?' சட்டம் சொல்வது என்ன? - 10

``நாளையிலிருந்து நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்!” இந்த ஒற்றை வாக்கியம் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உலகத்தையும் சில நொடிகளில் உலுக்கிப் போட்டுவிடும். மாதச் சம்பளம் நின்றுபோனால் குடும்பத்தை எப்படி நடத்துவது, ... மேலும் பார்க்க