செய்திகள் :

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: இளைஞர் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!

post image

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை தனிநபர் முகமுடி ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொள்ளையனைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள பட்டதாரி இளைஞர் ஒருவரின் வீட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை தெற்கு துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். பட்டதாரி இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில் காவல்துறையினர் இளைஞரின் பெற்றோரிடம் கடந்த  15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை நகைகடையில் கொள்ளை
மதுரை நகைகடையில் கொள்ளை

மேலும் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள பட்டதாரி இளைஞர் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளி பகுதிக்கு நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு ஆட்டேவில்  வந்த அந்த இளைஞர் கட்டைப்பையில் துணியை எடுத்துவந்து எரித்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் சொன்னதையடுத்து போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சோதனையின்போது பட்டதாரி இளைஞரின் தந்தையிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதும் குறிப்பிடதக்கது.

திருச்சி: ரூ. 5 லட்சம் கடன் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி!- ரூ. 8 லட்சத்தை இழந்த பெண்

திருச்சியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடந்த ஜூலை மாதம் 29 -ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் நான் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவன... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: எஃப்.ஐ.ஆரில் அருண் ஐ.பி.எஸ் உட்பட 7 பேர் பெயர் சேர்ப்பு - பின்னணி என்ன?

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி. இவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி சாந்தி, அவரின் கணவர் மகேந்த... மேலும் பார்க்க

`குடி’மகன்களால் கடத்தப்பட்ட சிறுமிகள்! - அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமலதா மாயமாகி 30 நாட்களைக் கடந்தும், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐபிஎஸ் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் சேர்ப்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரால் 24.09.2026 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைக... மேலும் பார்க்க

கரூர்: கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி; 12 வருடங்கள் கழித்து போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

கரூர், வெங்கமேடு ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்கிற அடைக்கலம் (வயது: 56), 2014 ஆம் ஆண்டு எஸ்தர் ராணி என்ற பெண்னுடன் முறை தவறிய நட்பில் இருந்து வந்துள்ளார். கரூர், செங்குந்தபுரத்தில் உள்ள ஒர... மேலும் பார்க்க

மதுரை: தனிஷ்க் நகை கடையில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை! - கடை திறந்து 15 நாட்களில் கைவரிசை

மதுரை பைபாஸ் சாலையில் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது சுமார் 15 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் திறக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கடையானது செயல்பட்ட நிலை... மேலும் பார்க்க