செய்திகள் :

`குடி’மகன்களால் கடத்தப்பட்ட சிறுமிகள்! - அடுத்தடுத்த சம்பவங்களால் அதிரும் விழுப்புரம்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்திருக்கும் ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஹேமலதா மாயமாகி 30 நாட்களைக் கடந்தும், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறி வருகின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். இந்த நிலையில்தான் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ந்து கிடக்கிறது விழுப்புரம். செஞ்சியை அடுத்திருக்கும் ஜெயங்கொண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்.

இவரது 7 வயது மகள் அதே பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9-ம் தேதி தீபாவளிக்கு மறுநாள், வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்குச் சென்று காய்கறி வாங்கி வருமாறு சிறுமியை அனுப்பியிருக்கிறார் தாய் அருணா. அதற்காகச் சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த இரண்டு போதை இளைஞர்கள் சிறுமியிடம் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சிவா

சிறிது நேரத்தில் சிறுமியை குண்டுகட்டாகத் தூக்கிய அந்த போதை இளைஞர்கள், அவரை ஆட்டோவில் வைத்து கடத்த முயற்சித்தனர். அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டு கதறியதால், அவரை அங்கேயே விட்டுவிட்டு போதை இளைஞர்கள் ஆட்டோவில் தப்பிச் சென்றனர். அந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செஞ்சி போலீஸார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில் செஞ்சியை அடுத்திருக்கும் பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சிவாவும், வடதாரம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஐயப்பனும் சிறுமியை கடத்த முயற்சித்தது தெரியவந்தது. சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு ஏர்போர்ட் பகுதியில் கூலி வேலை செய்து வந்த அவர்கள், தீபாவளிக்கு வந்தபோது கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதையடுத்து சென்னையில் தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது, `மது போதையில் இருந்ததால் சிறுமியை கடத்த நினைத்தோம்’ என்று கூலாக வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர் அந்த `குடி’மகன்கள். அதையடுத்து விசாரணையின்போது தப்பிச் செல்ல முயற்சித்திருக்கிறார் ஐயப்பன்.

அப்போது வலது கை அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல விழுப்புரம் கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவரின் 7 வயது மகள், அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் 11-ம் தேதி இரவு சுமார் 8 மணிக்கு தன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு போதை இளைஞர்கள், அந்தச் சிறுமியை கடத்திச் சென்றிருக்கின்றனர்.

கைது

அதில் பயந்துபோய் அழுது கூச்சலிட்ட அந்தச் சிறுமி, கடத்திச் சென்ற ஒருவனின் கையைப் பிடித்து கடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் பயந்துபோன அவர்கள் சிறுமியை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். அதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி, நடந்த சம்பவத்தை அழுதபடியே பெற்றோரிடம் கூறியிருக்கிறார். பதறிப் போன பெற்றோர்கள், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் சிறுமியை தூக்கிச் செல்வதும், சிறிது நேரம் கழித்து சிறுமி தனியாக நடந்து வரும் காட்சிகளும் இருந்ததால் அலெர்ட்டானது போலீஸ். தொடர்ந்து அப்பகுதியிலுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐபிஎஸ் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் சேர்ப்பு

சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரால் 24.09.2026 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைக... மேலும் பார்க்க

கரூர்: கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி; 12 வருடங்கள் கழித்து போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

கரூர், வெங்கமேடு ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்கிற அடைக்கலம் (வயது: 56), 2014 ஆம் ஆண்டு எஸ்தர் ராணி என்ற பெண்னுடன் முறை தவறிய நட்பில் இருந்து வந்துள்ளார். கரூர், செங்குந்தபுரத்தில் உள்ள ஒர... மேலும் பார்க்க

மதுரை: தனிஷ்க் நகை கடையில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை! - கடை திறந்து 15 நாட்களில் கைவரிசை

மதுரை பைபாஸ் சாலையில் தனிஷ்க் ஜூவல்லரி ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது சுமார் 15 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் திறக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று வழக்கம்போல கடையானது செயல்பட்ட நிலை... மேலும் பார்க்க

கேரளம்: தொல்லை கொடுத்த காதலனைக் கொல்ல கொட்டேஷன்; காதலியைத் தட்டித் தூக்கிய போலீஸ்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமொடியூர் பனங்காட்டுதொடி பகுதியைச் சேர்ந்தவர் சஃபானா (19). இவரும் பட்டாம்பி கொண்டூர்கரையைச் சேர்ந்த 19 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், க... மேலும் பார்க்க

தீபாவளிக்கு ஊருக்குச் சென்ற பானி பூரி வியாபாரி - ஓட்டைப் பிரித்து நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகில் உள்ள அவினாசி ரோடு, ராமநாதபுரம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித... மேலும் பார்க்க

AI-யை மனிதனாக நம்பியதால் விபரீதம்: `உறுப்பு விற்பனை ஆசை' - 4 வயது சிறுவனின் உடலை துண்டாடிய கொடூரம்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராம்ஜீத் ராம் (36), தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு சன்னா என்ற கிராமத்திற்குப் பிழைப்புத் தேடி இடம்பெயர... மேலும் பார்க்க