``பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக செயலாளர் மீது புகார்; என்ன நடவடிக்கை?" ...
``பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை: தவெக செயலாளர் மீது புகார்; என்ன நடவடிக்கை?" - வானதி சீனிவாசன்
கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, தவெக பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி என்பவர் தவெக பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் மேலும் கொலை மிரட்டல் மற்றும் சாதி வன்கொடுமை செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள செய்தியானது அதிர்ச்சி அளிக்கிறது.

சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை இது போன்ற வக்கிர புத்தியுடன் அணுகும் நபர்களைக் கொண்ட தவெக தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப் போகிறது? பிரச்சார மேடைகளில் ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே என்று முதல்வர் விஜய் அவர்கள் பேசியதன் அர்த்தம் இப்போதுதான் தமிழக மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது. கடந்த கால திமுக அரசு பெண்கள் பாதுகாப்பிலும் சட்டம் ஒழுங்கிலும் எப்படி திராணியற்ற அரசாக விளங்கியதோ அதையேதான் தற்போதைய தவெக அரசும் ஒரு படி மேலே செய்து வருகிறது.
தன்னை அண்ணா என அழைக்கும் உங்களின் சகோதரிகளாகிய தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உங்கள் சொந்த கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்ற மோசமான நிலையில் தான் பெண்களின் பாதுகாப்பு இருக்கிறது. தவெக தலைவர் அவர்கள் தனது கட்சிக்குள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














