செய்திகள் :

மேகதாது: "எந்த எல்லைக்கும் போவோம்.!'- டி.கே. சிவக்குமாரின் பேச்சு; மாணிக்கம் தாகூர் கண்டனம்

post image

மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார், " காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள்.

மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

இந்த விஷயத்தில் நீங்கள் எங்களுக்குச் சட்டரீதியாக உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று பேசியிருந்தார். டி.கே.சிவக்குமார் மோடி முன்னிலையில் இவ்வாறு பேசியிருப்பது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் டி.கே.சிவக்குமாரின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அவர்கள், "மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது" என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில் கர்நாடக முதலமைச்சர் தொடர்ந்து பிடிவாதப் போக்கைக் கையாண்டு வருகிறார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்தப் பேச்சை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு ஒரு கீழ்படுகை மாநிலம் என்பதால், நமது உரிமைகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் கர்நாடகா தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது. கீழ்படுகை மாநிலங்களின் முழுமையான ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, அது டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

மேகதாது
மேகதாது

மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க விடாமல் தடுப்பது மத்திய மோடி அரசின் கடமை.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தத் திட்டத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; நமது மாநில உரிமைகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம்.

இன்று நான் தஞ்சாவூர் செல்லவிருக்கிறேன்; அங்கு இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச உள்ளேன்.

காவிரி உரிமைக்காகத் தமிழ்நாடு எப்போதும் ஒன்றுபட்டு நிற்கும். தமிழ்நாட்டின் நலனையும், நமது விவசாயிகளின் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எங்களது குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்: 6,600 விமானங்கள் ரத்து, 8,600 தாமதம்! என்ன நடந்தது?

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் Federal Aviation Administration (FAA), நவம்பர் 13-ஆம் தேதி நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதித்தது. விமானப் போக்குவரத்... மேலும் பார்க்க

கரூர்: 'சஷ்டி நாளில் கிடா வெட்ட முடிவு செய்துள்ளார்கள்; தடுக்க வேண்டும்!'- எஸ்.பி அலுவலகத்தில் மனு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூர் தாலுக்கா தே.இடையப்பட்டி, காமராஜ் நகர் ஊர்பொதுமக்கள் கோவில் திருவிழா ஒற்றுமையாக நடத்த கோரியும் , கந்த கரூர் அருகே சஷ்டி நாளில் கிடாவெட்டு நடத்த எதிர்ப்பு தெர... மேலும் பார்க்க

Agilisium: 'பாராட்டுகிறோம்!'- ஹைதராபாத் செல்லவிருந்த நிறுவனத்தைத் தடுத்த தமிழக அரசு; நெகிழ்ந்த CEO

முன்னணி டேட்டா அனலிடிக்ஸ் மற்றும் ஏஐ நிறுவனமான 'அஜிலிசியம்' (Agilisium) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ராஜ் பாபு, தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவ... மேலும் பார்க்க

"டெல்லிக்குச் சென்றபோது இந்தி தெரியாமல் சிரமப்பட்டேன்" வருத்தப்பட்ட அமைச்சர் ராஜேஷ்குமார்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது. கனிமவளத் துறையின் இயக்குநரும், குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ப... மேலும் பார்க்க

"என்னுடன் விவாதம் நடத்தினால் மோடி பிரதமராக இருக்கமாட்டார்" - போனை பதிவு செய்வதாக கூறும் ராகுல்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் என்னிடம் கேளுங்கள் என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பொதுமக்கள் மற்றும் அவரது கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார... மேலும் பார்க்க