மீண்டும் ஒரு காவல் மரணம்: ``தவெக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது காவல்துறை" - டி...
வீடு புகுந்து திருடிய வழக்கு; கைதான குற்றவாளி மீது குண்டர் சட்டம்; கரூர் போலீஸ் அதிரடி
கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஆத்தூர் புதூரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் தனது மனைவியுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அவரது வீட்டிற்குள் புகுந்து நான்கரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.1,30,000 என மொத்தம் ரூ.1,96,000 மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது சம்மந்தமாக, கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சம்பவ இடத்தில் கிடைக்கபெற்ற CCTV பதிவுகளைக் கொண்டு ஆராய்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய மணிவண்ணன் (வயது: 24) என்பவரைக் கைது செய்தனர். இவர், சிவகங்கை மாவட்டம், கிழவணியங்குடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசன்னா ராமசாமி உத்தரவின்படி நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், "கரூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். தனியாக விரிவாக்கப் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் CCTV Camera பொருத்த வேண்டும்" எனக் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.










