செய்திகள் :

தேனியில் SI கொலை: "குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி" - முதல்வர் விஜய் அறிவிப்பு

post image

நேற்று (நவம்பர் 8) தேனி மாவட்டத்தில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கி.செந்தில்குமார் (வயது 57, எண்: 1447) அவர்கள்,

விஜய் அறிவிப்பு
விஜய் அறிவிப்பு

நேற்று (08.11.2026) இரவு, தனது பணியில் இருந்தபோது, சமதர்மபுரம் பகுதியில் சில நபர்கள் சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பட்டாசுகளை வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அவர்களைக் கண்டித்த போது அவர்கள் தாக்கியதில்,

பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் கி.செந்தில்குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கி.செந்தில்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்". எனத் தெரிவித்துள்ளார்.

'சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?'- ரவிசங்கருக்கு எடப்பாடி கண்டனம்

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.... மேலும் பார்க்க

'தனது ஆசையை விஜய் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் ஏற்பட்ட கோபமா?'- ரவிசங்கருக்கு டிடிவி கேள்வி

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னுடைய பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.... மேலும் பார்க்க

தமிழகத்தில் நேற்று 11 கொலைகள்: " அகந்தையில் வாழும் முதலமைச்சர் வாய் திறக்கப் போவதில்லை" - கனிமொழி

நேற்று (நவம்பர் 8) தீபாவளி அன்று தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளன.இந்தச் சட்ட ஒழுங்கு பிரச்னையைச் சாடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.கனிமொழி தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

ஈரான் போரின் அடுத்த கட்டம்: ட்ரம்பிற்கு '2 நாள் திட்டத்தை' பரிந்துரைக்கும் ஈரான் - அது என்ன?

அமெரிக்க மக்கள் ஈரான் போரில் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் விளைவாகவே, நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது.இதனால், ‘நவம்பர் 3-ம் தேதிக்குப் பின்’ என்ற... மேலும் பார்க்க

ஒரே நாளில் 9 கொலைகள்: 'எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?'- உதயநிதி கண்டனம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 9 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்... மேலும் பார்க்க

"அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி பட்டாசு விற்பனை - மாபெரும் இலக்கு" - அமைச்சர் கீர்த்தனா

இந்த ஆண்டு (2026) தீபாவளியையொட்டி ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் ... மேலும் பார்க்க