மனு அளிக்கச் சென்றவரை கண்மூடித்தனமாக தாக்கினாரா துணை சபாநாயகர்? - வைரலான வீடியோவ...
டெல்லி: கையில் இருந்த ராக்கெட் பட்டாசு வெடித்து சிதறி, நெஞ்சில் பாய்ந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு
தீபாவளி என்றாலே அனைவருக்கும் பட்டாசுதான் நினைவுக்கு வரும். பட்டாசு வெடிக்கும் போது அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். தமிழ் நாட்டில் தீபாவளி ஒரு நாளில் முடிந்துவிடும். ஆனால் வட இந்தியாவில் ஒரு வாரம் வரை தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். டெல்லி நரேலாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷி(10) என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தான். ரிஷி ஒரு ஸ்கை ராக்கெட்டைப் பற்றவைத்ததாகக் கூறப்படுகிறது. அது வானத்தை நோக்கி செல்லக்கூடியது. அந்த பட்டாசை சிறுவன் கையில் வைத்துக்கொண்டு பற்றவைத்தான்.
அந்த பட்டாசு வானத்தை நோக்கி செல்வதற்கு பதில் அவனது நெஞ்சில் தாக்கியது. உடனே சிறுவனை அங்குள்ள சத்யாவாடி மருத்துவமனைக்கு அவனது பெற்றோர் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிறுவன் பரிதாபமாக இறந்து போனான். சிறுவனின் மரணத்திற்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து ரிஷியின் மூத்த சகோதரர் மோஹித் கூறுகையில்,'' "மருத்துவர்கள் அவசர கேஸாக எடுத்து எனது சகோதரனுக்கு சிகிச்சை கொடுக்கவில்லை. அவர்கள் என் சகோதரனை நோக்கி மெதுவாகச் சென்று அவரது மார்பை மட்டும் அழுத்தினர். எனது சகோதரனை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் காப்பாற்ற தவறிவிட்டனர்," என்று மோஹித் கூறினார். ரிஷியின் தாயார் அஞ்சலியும் தனது மகன் இறப்புக்கு மருத்துவமனைதான் காரணம் என்று தெரிவித்தார்.
குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தவுடன், மருத்துவமனைக்கு வந்த ரிஷியின் தந்தை மயங்கி விழுந்தார். ரிஷியின் உடல் எடுத்துச் செல்லப்ப்பட்ட போது மோஹித் தனது தந்தையை கவனித்துக் கொண்டிருந்தார்



















