செய்திகள் :

தேனி: சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை: போதை இளைஞர்கள் வெறிச்செயல்!

post image

தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு ஆய்வாளராக செந்தில்குமார் (55 வயது) பணியாற்றி வந்தார். நேற்றைய தினம் தீபாவளி என்பதால் பணி முடித்துவிட்டு இரவு பத்து முப்பது மணிக்கு சம தர்மபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

அப்போது சம தர்மபுரம் மெயின் பஜாரில் மது போதையில் சில இளைஞர்கள் நடுரோட்டில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை வெடித்து அதனை ரீல்ஸ்களாக எடுத்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து கொண்டு இருந்தார்கள். இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரிடம் முறையிட்டனர்.

செந்தில்குமார்

இதனை தொடர்ந்து செந்தில்குமார் போதையில் வெடி வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் "ஏம்பா இப்படி நடுரோட்டில் வைத்து வெடிக்கிறதா டைம் முடிஞ்சு போச்சு சத்தம் போடாம ஒழுங்கா வீட்டுக்கு போங்க" எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த மது போதை இளைஞர்கள் "அப்படியெல்லாம் போக முடியாது நீங்க சொன்னா போணுமா... அப்படித்தான் வெடிப்போம்" எனக் கூறி மீண்டும் பட்டாசுகளை வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனை சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அனைவரும், சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரை சூழ்ந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

செந்தில்குமார்

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பாதியிலே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட காவல்துறை விசாரித்த போது கெளதம் , மகேஷ்வரன், மற்றும் பிரனோஸ் ஆகியோரை கைது செய்தது மட்டுமல்லாமல் மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களும் 25 -வயதிற்கு உட்பட்டவர்கள். மேலும் மது போதைக்கு ஆளாகி பணியில் இருந்த ஒரு போலீசையே அடித்துக் கொலை செய்யும் அளவிற்கு நடந்திருக்கும் சம்பவம், தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எரிந்த நிலையில் பெண்ணின் உடல்; கணவர் வீட்டாரே கொலை செய்தது அம்பலம் - சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் சாலையோரமுள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை ... மேலும் பார்க்க

நெல்லை: "இன்ஸ்டா பழக்கத்தால் இளைஞர்களுடன் திருமணம் மீறிய உறவில் மனைவி" - கொலை செய்த கணவன் கைது

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். நெல்லையில் இயங்கி வரும் தனியார் குக்கர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சம... மேலும் பார்க்க

மது விருந்து... அம்மிக்கல் ஆயுதம்; மனைவி உட்பட 7 பேரை சினிமா பாணியில் கொன்று புதைத்த டாக்ஸி டிரைவர்!

பெங்களூருவில் டாக்ஸி டிரைவராக இருப்பவர் இந்து சேகர். இவரது மனைவி சுனிதா. 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

`நாவல்' எழுதி போலீசிடம் சிக்கிய கொலையாளி கிறிஸ்டியன் பாலா: போலந்தின் நிஜ கதை! - குருதிச் சுவடுகள் 1

சினிமாக்களில் கூட கற்பனை செய்யத் தயங்கும் பல வினோதங்களை நிஜ வாழ்க்கை நிகழ்த்திக் காட்டிவிடுகிறது. ஒரு கொலையை நேர்த்தியாக நிகழ்த்திவிட்டு, அதைத் துப்பறியும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ம... மேலும் பார்க்க

குமரி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஜினீயரிங் மாணவர்; போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டத... மேலும் பார்க்க

வேலூர்: 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற 22 வயதான இளைஞன், சாலையில் தனியாகச் சென்ற 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி அழுதபடியே வீட்டுக்கு ஓடிச் சென்று த... மேலும் பார்க்க