செய்திகள் :

குமரி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஜினீயரிங் மாணவர்; போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

post image

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார், மகளைக் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் மாணவியைப் பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மகளிடம் இது குறித்துக் கேட்டார். கொல்லங்கோடு அருகே உள்ள சின்னதுறைப் பகுதியைச் சேர்ந்த பிஜோ எஸ் தியோ (வயது 22) கர்ப்பத்துக்குக் காரணம் என மாணவி தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவின்போது மாணவிக்கும் பிஜோ எஸ் தியோவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவியின் செல்போன் எண்ணைக் கேட்டுப் பெற்ற பிஜோ எஸ் தியோ நீண்ட நாட்களாகப் பேசி வந்துள்ளார். பிஜோ எஸ் தியோ கோயம்புத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த பிஜோ எஸ் தியோ மாணவியிடம் நேரில் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

கடந்த ஏப்ரல் மாதம் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட பிஜோ எஸ் தியோ அவரது வீட்டுக்குச் சென்றார். வீட்டின் மேல்மாடிப் பகுதிக்குச் சென்று மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிஜோ எஸ் தியோ விடுமுறை முடிந்து கல்லூரி செல்லும் வரை மாணவியைத் தனிமையில் சந்தித்துப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதில் அவர் கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போக்ஸோவில் கைதுசெய்யப்பட்ட பிஜோ எஸ் தியோ

இதுகுறித்து மாணவியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.ஐ மீனாகுமாரி விசாரணை நடத்திப் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறிப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பிஜோ எஸ் தியோ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். இதையடுத்து இன்ஜினீயரிங் மாணவரைக் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரைச் சிறையில் அடைத்தனர்.

வேலூர்: 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற 22 வயதான இளைஞன், சாலையில் தனியாகச் சென்ற 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி அழுதபடியே வீட்டுக்கு ஓடிச் சென்று த... மேலும் பார்க்க

கேரளம்: பாலியல் புகாரை மறைக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்; மருத்துவரைத் தாக்கிய நடிகை கைது

கேரள மாநிலம் கொச்சி திருப்பூணித்துறை ஹில்பேலஸ் பகுதியில் வசித்து வருபவர் நடிகை அதுல்யா சந்திரா. மும்பையில் பிறந்து வளர்ந்த அதுல்யா சந்திரா, கொச்சியில் உள்ள பிரபல குற்றவியல் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பண... மேலும் பார்க்க

உ.பி: மனைவியை சேரில் கட்டிவைத்து எரித்த கணவர்... எலும்புக்கூடாக மீட்ட போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம், கன்னௌஜ் மாவட்டத்தில் ஜகாபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோனம். இவரது கணவர் சுக்பிர் சிங். இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துத்தான் திருமணம் ச... மேலும் பார்க்க

நெல்லை: முதல்வர் நிகழ்ச்சி பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸூக்குப் பாலியல் தொல்லை - எஸ்.எஸ்.ஐ கைது!

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முதல்வர் விஜய் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி 3-ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிக்காக நெல்லையில் இருந்து போலீஸார் சென்றிருந்தனர். அந்தக் குழுவில் சென்ற ப... மேலும் பார்க்க

திருச்சி: காணாமல் போன தாய்; 3 நாள்களாகத் தேடிய மகன்; தைல மரக்காட்டில் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி அங்காயி(வயது: 56). இவா், கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது மகன் கமலதாசன்(வயது: 35)... மேலும் பார்க்க

அசாமில் 5 பேரைச் சுட்டுக்கொன்ற நபர்; போலீஸிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றதால் என்கவுண்டர்?

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழிலதிபர் கனகாந்தா கோகாய் என்பவர் ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பான பிரச்னையில் துப்பாக்கியால் சுட்டதில் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 5 பேர் உயிரிழந்... மேலும் பார்க்க