செய்திகள் :

தேவா: 'ரொம்ப கஷ்டமா இருக்கு; இப்படி திடீர்னு...' - கலங்கிய வடிவேலு

post image

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.

தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தேவா
தேவா

இந்நிலையில், தேவாவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் வடிவேலு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

"அண்ணன் தேனிசை தென்றல்... உண்மையிலேயே அவர் தென்றல் தான். அவர் இறந்த செய்தியைக் கேட்கும்போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

திடீர் மாரடைப்பால் இறந்தது மனதைப் பொக்குகிறது. அந்த குடும்பத்திற்கே அவர் ஒற்றை ஆள்தான். எப்போதும் அவரிடம் ஒரு மிகை இருக்காது. ஒரு அன்பு இருக்கும்.

தேவா
தேவா

பார்த்தால் ' வாங்க தம்பி வடிவேலு' என்று அன்பாக, பாசமாகப் பேசக்கூடியவர். அந்தக் குடும்பத்திற்கு கடவுள் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். தேவா ஐயாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

'என் ஹார்மோனியப் பெட்டி பத்தி கவிதை சொல்ல முடியுமான்னு தேவா சார் கேட்டாரு.!'- பா.விஜய் ஷேரிங்

இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.தேவாதற்போது ... மேலும் பார்க்க

தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது' - கலங்கிய சீமான்!

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்ந... மேலும் பார்க்க

"என் வாழ்க்கையே தேவா சார் இசையில்தான் தொடங்கியது"- எஸ்.ஜே.சூர்யா எமோஷனல்

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா... மேலும் பார்க்க

Jailer 2: "திரையில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டதைக் கண்டு..." - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்த... மேலும் பார்க்க