செய்திகள் :

தைலாபுரம்: `ராமதாஸிடம் அரசியல் பேச வேண்டாம்!’- அறிவிப்பு பேனருடன் அனுமதிக்கப்படும் பாமக நிர்வாகிகள்

post image

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ராமதாஸ், சரஸ்வதி திருமண நாளில் முடிவுக்கு வந்தது. அன்று குடும்பத்துடன் தைலாபுரம் சென்ற அன்புமணி, ராமதாஸிடம் ஆசி பெற்றார். அப்போது, அன்புமணியை கட்டிப்பிடித்து அழுதார் ராமதாஸ். அதையடுத்து இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஜூன் மாதம் 27 ஆம் தேதி மருத்துவர் ராமதாஸின் 88-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய மருத்துவர் ராமதாஸ், `இன்று எனக்கு 88-வது வயது தொடங்குகிறது. இந்த நல்ல நாளில் ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இன்று முதல் எனக்கு 'அரசியல் துறவறம். அரசியல் துறவறம் என்று சொன்னால், நான் இனி அரசியல் பேச மாட்டேன்.

அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். ஆனால் என்னைப் பார்க்க வருபவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன். அவ்வளவுதான். அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். நாங்களும் அதற்குத் துணையாக இருப்போம். என்னை வந்து பார்ப்பவர்கள் 'ஐயா நலமா?' என்று மட்டும் கேட்டுவிட்டுச் செல்லலாம்.

அன்புமணி, ராமதாஸ்

அரசியலைப் பேசுவதற்கு இனி ஏதுமில்லை, ஏனென்றால் இன்று முதல் நான் ஒரு துறவியாகிவிட்டேன்' என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்குச் சென்ற ராமதாஸ், முழு ஓய்வில் இருந்தார். தன்னிடம் அரசியல் பேசக்கூடாது என்று அவர் கூறியிருந்ததால், ஜுன் மாதம் முதல் வெறிச்சோடிக் காணப்பட்டது தைலாபுரம்.

இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை மருத்துவர் ராமதாஸ் சந்திப்பார் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று முதல் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ். அவரை சந்திக்கும் தொண்டர்கள், தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களை வழங்குகின்றனர்.

காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமதாஸை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, `அரசியல் துறவறம்…மருத்துவர் அய்யா அரசியல் துறவறம் மேற்கொண்ட காரணத்தால், தைலாபுரம் தோட்டத்தில் அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்' என்று பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க