செய்திகள் :

தொகுதி மறுவரையறை மசோதா: மகளுக்கு அமைச்சர் பதவி, மாநில அமைச்சரவையில் இடம்! கேட்கும் சரத் பவார்?

post image

மத்திய அரசு இம்மாதம் 30ம் தேதி தொடங்கும் சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர இருக்கிறது. இதற்காக ஏற்கனவே ஒரு முறை சிறப்பு பாராளுமன்றத்தை கூட்டி அதில் பா.ஜ.க அரசு தோல்வியை தழுவியது. இப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆதரவு பா.ஜ.க அரசுக்கு கிடைத்து இருக்கிறது.

தேசியவாத காங்கிரஸின் சரத்பவார் பிரிவுக்கு 8 மக்களவை உறுப்பினர்கள் இருக்கின்றனர். நேற்று அக்கட்சி தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு கொடுப்போம் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது. அதேசமயம் ஆதரவு கொடுக்க தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) பா.ஜ.கவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அதில் சரத் பவாரின் மகளும் கட்சியின் செயல் தலைவருமான மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலேக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சுப்ரியா தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வருகிறார்.

மாநில அமைச்சரவையில் பங்கு

அதோடு பாஜக தலைமையிலான மகாராஷ்டிர அரசிலும் தங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று சரத்பவார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு இரண்டு அமைச்சரவை இடங்களை ஒதுக்குமாறு அந்த கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸை சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் நிதி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கட்சியின் மூத்த தலைவர் ஜிதேந்திர அவாடிற்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், பிற மூத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இரண்டு இணை அமைச்சர் பதவிகளையும் அந்த கட்சி கோரி வருகிறது.

அதோடு கட்சித் தலைவர் சரத் பவார் மகாராஷ்டிர முதலமைச்சர் பதவிக்கு சுப்ரியாவின் பெயரை முன் வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை சரத்பவார் அணி மறுத்துள்ளது. மாநில சட்டமன்றத்தில் தங்கள் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டி, இந்தக் செய்திகள் ஆதாரமற்றவை என்று சுப்ரியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுக்கு விளக்கமளித்த சரத் பவார்

சரத்பவாரின் கட்சிக்குள், ஒரு பிரிவினர் அதிகார பகிர்வு குறித்து ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.அதே சமயம் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறது. எனவே இவ்விவகாரம் குறித்து சரத்பவார் காங்கிரஸ் தலைமையுடன் போனில் பேசி இருக்கிறார். அவர் தொகுதி மறுவரையறை மசோதாவை ஏன் ஆதரிக்கிறோம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் தனது தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சி பிரியாமல் ஒற்றுமையாக இருக்க இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக சரத்பவார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத்பவார் மட்டுமல்லாது அவரது மகளும் இந்த மசோதாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சரத்பவார் கட்சி மட்டுமல்லாது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.கவும் இப்போது தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தி.மு.க எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தாலும் அது பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமாகவே முடியும் என்பதால் தி.மு.கவின் முடிவை பா.ஜ.க மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதே மசோதா ஓட்டெடுப்புக்கு வந்தபோது மசோதாவிற்கு ஆதரவாக 298 பேர் மட்டுமே வாக்களித்தனர். ஆனால் மசோதா நிறைவேற 352 பேரின் ஆதரவு தேவை.

திருப்பரங்குன்றம்: "இப்படி ஒரு அசிங்கம் மாநிலத்திற்கு தேவையா?"- நீதிமன்ற உத்தரவு குறித்து இபிஎஸ்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

"மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக, ஆனால்.!"- சசி தரூர்

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவிற்கு திமுக நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது அதிருப்தியை வெளி... மேலும் பார்க்க

’எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காத ஜோசப் விஜய்தான் முதல் குற்றவாளி’– வானதி சீனிவாசன்!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: 'கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது தவெக அரசு'- ஸ்டாலின் விமர்சனம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” - உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மோடி பதிவு

கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது. ஆனால், அந்த உத்தரவின்படி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது: "முதல்வர் விஜய் நீங்க கைது பண்ணல, நாங்க கைது பண்ண வெச்சோம்"- இபிஎஸ்

மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைது குறித்து பதிவிட்டிருக்கும் அதிமுக பொது... மேலும் பார்க்க