செய்திகள் :

தொடரும் மின்வெட்டு: "'ப்யூஸ் போன' தவெக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்" - உதயநிதி

post image

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்னை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சிடிஆர் நிர்மல்குமார்| மின்சாரத்துறை அமைச்சர்
சிடிஆர் நிர்மல்குமார்| மின்சாரத்துறை அமைச்சர்

ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.

மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று விமர்சித்திருக்கிறார்.

BRICS Summit 2026: "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல" - பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாட... மேலும் பார்க்க

தாராபுரம் இடைத்தேர்தல்: "தவெகவிற்கு வரலாறு காணாத வெற்றி உறுதி" - அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அதிகாரிகள... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையிலிருக்கும் தேவகவுடா பேரனின் மொபைலில் ஆபாச வீடியோ; சிக்கியது எப்படி?

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: 'ஆசிரியர்களைச் சொந்தப் பணத்தைச் செலவிடக் கட்டாயப்படுத்துவது ஏன்?'- அன்புமணி

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு தேவையான அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

திமுக ஆர்ப்பாட்டம்:``பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சரை வச்சிட்டு எங்களை சொல்றீங்களா?" - மேயர் பிரியா

சட்டப்பேரவையில் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையிலும், மிசா சட்டம் குறித்து தவறாகவும் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து, தி.மு.க தலைமை உத்தரவின்படி தமிழ்... மேலும் பார்க்க

போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

போர்மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு '... மேலும் பார்க்க