செய்திகள் :

தொழில்துறை : `கெஸ்ட் ஹவுஸுக்கு வரச்சொன்ன முதல்வரின் உதவியாளர்' - தெலங்கானா பெண் தொழிலதிபர்

post image

தெலங்கானா மாநிலத்தில் விளம்பரத்துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக முயன்ற பெண் தொழிலதிபர் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பேசுபொருளாகியிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கே. சோபா ரெட்டி. 'மிதுனா ஆட்ஸ்' (Mithuna Ads) நிறுவனத்தின் உரிமையாளரான இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிப்புற விளம்பரத் துறையில் (Outdoor Advertising) சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்புகளைப் பெறப் போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் ஒருவரை அணுகியிருக்கிறார். அப்போது அவர், இது குறித்துப் பேசுவதற்காகத் ஒரு விருந்தினர் இல்லத்திற்கு (Guest House) வருமாறு அழைத்தார். இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த அசௌகரியத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

இது தொடர்பாக சோபா ரெட்டி, ``என்னை கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்தது பெரும் அசௌகரியத்தைக் கொடுத்தது. பொதுவெளியில் சம்பந்தப்பட்ட நபர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரது பெயரை வெளிப்படுத்தவோ விரும்பவில்லை. இருப்பினும், முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசு தொடர்பான விவகாரங்கள் மற்றும் சந்திப்புகள் அனைத்தும் உத்தியோகபூர்வமான, வெளிப்படையான மற்றும் கண்ணியமான அரசு அமைப்புகளின் வாயிலாகவே நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

நான் எந்தவிதமான சிறப்புச் சலுகையையும் கேட்கவில்லை. சட்டப்பூர்வமான தொழில் வாய்ப்பு, சமமாக நடத்தப்படுதல் மற்றும் தொழில் செய்வதற்கான கண்ணியம் ஆகியவற்றை மட்டுமே எதிர்பார்க்கிறேன். இந்தத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், அனைவருக்கும் ஒரே மாதிரியான நடைமுறையையும் அமல்படுத்தி, தனது கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் ." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

போலி நகை விற்றதாக ஜூவல்லரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகார் - பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது!

தூத்துக்குடி, மூன்றாவது மைல் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவர், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர். இவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி இசக்கிராஜ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை... அத்துமீறிய தந்தை; சிங்கப்பெண் படையிடம் புகாரளித்த மாணவி - பாய்ந்தது போக்சோ!

நெல்லை, டவுன் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், 52 வயதான பிளம்பிங் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகள், நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: `மொபைலில் சிறுமியின் பாலியல் வீடியோ'- வீரமணியின் வலதுகரம் கைது.. வேகமெடுக்கும் விசாரணை!

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி 29.08.2026- ம் தேதி கைது செய்யப்பட்டார். வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் த... மேலும் பார்க்க

சென்னை: போக்சோ வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ கொலை - ஆண் நண்பருடன் மனைவி சிக்கிய `அதிர்ச்சி' பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் வசித்து வந்தவர் ராஜ் (58), இவர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கருகிய நிலையில் ... மேலும் பார்க்க

உறவை முறித்த `ஆசிரியை'யான காதலி; மாணவர்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்று விபரீத முடிவெடுத்த இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பாத்திமா (26). இவர் மொகமத் (27) என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் மொகமத்துடனான உறவை முறித்துக்... மேலும் பார்க்க

நடுரோட்டில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை; "இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்" - பீகார் அமைச்சர் பேச்சு

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து தனது ஆண் நண்பருடன் திரும்பிக்கொண்டிருந்த 10வது மாணவியை ஒரு கும்பல் வழிமறித்துச் சூழ்ந்துகொண்டது, அவர்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவர்களைத் தாக்க... மேலும் பார்க்க