செய்திகள் :

`நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளும் கார் ரேஸ்' - முதல்வர் விஜய் எப்போது தொடங்கி வைக்கிறார்?

post image

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் விஜய் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரிட்டனில் இன்று (செப். 12) நடைபெறும் புகழ்பெற்ற 'மிஷெலின் லீ மான்ஸ் கப் சில்வர்ஸ்டோன்' கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணி முதல் 11.45 மணி வரை நடைபெறும் இப்போட்டியில், பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். திரையுலகில் ஆரோக்கியமான போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்ட விஜய்யும் அஜித்தும், எப்போதும் சிறந்த தனிப்பட்ட நட்பைப் பேணி வருகின்றனர். இந்த லண்டன் நிகழ்வின் போது முதல்வர் விஜய், அஜித்தைச் சந்தித்து உரையாடவுள்ளார் என்ற தகவல் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்... “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியா... மேலும் பார்க்க

Powerlifting: சர்வதேச போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 17 வயது மதுரா கர்

தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக... மேலும் பார்க்க

140 கிலோ தூக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்த Keyaa Banerji; வைரலுக்கு பின்னால் இப்படியோர் அதிர்ச்சி!

45.7 கிலோ உடல் எடை… 140 கிலோ Deadlift! இந்த அசாத்திய சாதனையைச் செய்து சமூக வலைதளங்களில் வைரலானவர் இந்திய பவர்லிஃப்டர் Keyaa Kunal Banerji.21 வயதான கேயா, தென்னாப்பிரிக்காவின் Sun City-யில் நடைபெற்ற 202... மேலும் பார்க்க

ஒரே இன்னிங்ஸ்... இரண்டு உலக சாதனைகள் - வரலாறு படைத்த Smriti Mandhana!

துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில், ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 124 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். இதன் ம... மேலும் பார்க்க

மத்திய ஆசியாவின் ஒலிம்பிக்: கிர்கிஸ்தானில் தொடங்கிய 2026 உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்!

நவீன உலகிற்கு மத்தியில், தனது பழம்பெரும் கலாசாரத்தையும் வீரத்தையும் பறைசாற்றுகிறது 'உலக நாடோடி விளையாட்டு போட்டிகள்' (World Nomad Games). 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கிர்கிஸ்தான் ந... மேலும் பார்க்க

Linkedin-ல் 'Fielding Coach'-ஐ தேடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - என்ன சொல்கிறார்கள்?

நாம் வேலை தேடுவது, நிறுவனங்கள் நம்மை வேலைக்குத் தேடுவது, வேலை குறித்து அப்டேட்களைப் போஸ்ட் செய்வது என முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாக இயங்கும் ஓர் ஆப் - லிங்க்ட்இன்.இந்த ஆப்பில் சமீபத்தில் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க