செய்திகள் :

நடிகை சம்ரீன் கவுரைக் கரம்பிடிக்கும் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்; Love Proposal படங்கள் வைரல்!

post image

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் அர்ஷ்தீப் சிங் அங்கு சென்றுள்ளார்.

அவருடன் பிரபல நடிகையும் மாடலுமான சம்ரீன் கவுரும் சென்றிருக்கிறார். இந்த நிலையில், நியூஸிலாந்தில் அர்ஷ்தீப் சிங் நடிகை சம்ரீனுக்குக் காதலைத் தெரிவித்து மோதிரம் அணிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

இது தொடர்பாக அர்ஷ்தீப் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``வாழ்க்கை நமக்குக் கொடுத்த அனைத்து விஷயங்களிலும், நாம் ஒருவருக்கொருவர் கிடைத்ததே எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்நாள் முழுமைக்குமான பயணத்திற்கு... 11.11.2026" என்ற நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.

ஜூலை 26 அன்று சம்ரீனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து "My Person" எனப் பதிவிட்டு, தங்கள் காதலை அர்ஷ்தீப் சிங் முறைப்படி வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.

யார் இந்த சம்ரீன் கவுர்?

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சம்ரீன் கவுர் நடிகை, மாடல் மற்றும் சமூக வலைதளப் பிரபலம் ஆவார். 2018-ம் ஆண்டின் 'ஃபெமினா மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் சார்பில் பங்கேற்று இறுதிப் போட்டி வரை முன்னேறியவர்.

தொடர்ந்து '83' திரைப்படம், 'நெயில் பாலிஷ்' தொடர் மற்றும் பஞ்சாபி திரைப்படமான 'சர்தார் ஜி 2' ஆகியவற்றில் நடித்துள்ளார். மேலும் குரு ரந்தவா, பாட்ஷா மற்றும் ஜூபின் நௌதியால் போன்ற பிரபல பாடகர்களின் ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

IPL 2027 மெகா டிரேட்: மும்பை இந்தியன்ஸில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறிய ஹர்திக் பாண்டியா!

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மெகா டிரேட் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, எதிர்வரும் IPL 2027... மேலும் பார்க்க

"ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான் கோலியுடன் பேசினேன்" - கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாகத் தெரிவித்திருக்கிற... மேலும் பார்க்க

இந்தியா சுற்றுப்பயணம் மிஸ்ஸிங்! ₹627 கோடி நிதி இழப்பு நெருக்கடியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

2027-ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு (ECB) நிதி ரீதியாகச் சவாலான ஆண்டாக அமையப்போகிறது. இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாதது ஒருபுறம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான IC... மேலும் பார்க்க

IPL: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CSK; SRH உடன் நடந்த மெகா டிரேட்! - கைமாறிய வீரர்கள் யார்?

ஏன்பா... இவரு வர்றாரா? இல்ல... அப்போ அவர் வர்றாரா? அவரும் இல்லை... பின்ன யார்தான்யா வரப்போறாங்க? இப்படிப் பல கேள்விகளுடன் CSK ரசிகர்களை டிரேட் ஹைப்பில் வைத்திருந்தது CSK மேனேஜ்மென்ட். ஒவ்வொரு நாளும், ... மேலும் பார்க்க

IND vs NZ: "ஆட்டத்தை ஆரம்பிச்சது அர்ஷ்தீப்... முடிச்சு வச்சது கோலி!"- நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

'இது எங்க கிரவுண்டு... எங்க ஏரியா' எனச் சொந்த மண்ணில் கான்பிடன்ட்டாக களமிறங்கியது நியூசிலாந்து. ஆனால், எதிர்முனையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வைத்திருந்த திட்டமே வேறு! இந்தியா – நியூசிலாந்து அணிகளுக... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவின் `அதிரடி' ஆட்டக்காரன் - ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்! - குட் பை மேக்ஸ்

'மேக்ஸ்வெல்' - எடுத்த முடிவுஅதிசயங்கள் நிகழ்வது மட்டுமில்லை, நிகழ்த்தவும் படும் என்பதற்கு சாட்சியாய் ,2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக "கிளேன் மேக்ஸ்வெல்" நிகழ்த்தி... மேலும் பார்க்க