செய்திகள் :

நல்லகண்ணு மறைவு: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்.!"- ஸ்டாலின் நேரில் அஞ்சலி

post image

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அவரது உடல் தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்லி செலுத்தியிருக்கிறார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு. க ஸ்டாலின், " இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு நல்லகண்ணு மறைவு வருத்தமான செய்தி. பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோருக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடமாக விளங்கியவர் நல்லகண்ணு. அவரை இழந்து வாடக்கூடிய குடும்பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழருக்கும் எனது இரங்கல்களை திமுக சார்பாக தெரிவித்துகொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. முத... மேலும் பார்க்க

நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு இன்று காலமானார்.அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரே... மேலும் பார்க்க

ஆபாசப் பேச்சு: ``அவர் கரூர் எஸ்.பி-யா... பாஜக தலைவருக்கு வக்கீலா?" - எம்.பி ஜோதிமணி ஆவேசம்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் கரூர் மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டக் கூட்டத்தில் உரையாற்றிய கரூர்... மேலும் பார்க்க

நல்லகண்ணு மறைவு: "தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்" - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்... மேலும் பார்க்க