செய்திகள் :

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” - ஐ.நா-வில் ஈரான் அதிபர்

post image

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான். இந்தப் பயணம் நியூயார்க்கில் நடக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திற்காக.

ட்ரம்ப் பேச்சு

நேற்று முன்தினம் (செப்டம்பர் 22), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தக் கூட்டத்தில் பேசியிருந்தார். அப்போது, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் மிட்-டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது.

அதன் பின், ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படலாம் என்று பாசிட்டிவாகக் கூறியிருந்தார். இருந்தாலும், ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஈரானை அழிப்பேன் என்றும் ஒரு ‘செக்கும்’ வைத்திருந்தார்.

நவம்பர் மாதத்திற்குப் பின் ஒப்பந்தம் என்ற ட்ரம்ப் பேச்சு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு பூஸ்ட் கொடுத்திருந்தது.

ஐ.நாவில் ட்ரம்ப் பேச்சு
ஐ.நாவில் ட்ரம்ப் பேச்சு

ஈரான் அதிபர் பேச்சு

இந்த நிலையில், நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் மசூத் பெசெஷ்கியான் பேசினார்.

அந்தப் பேச்சில், “நேற்று ட்ரம்ப் எங்களைப் பயங்கரவாதிகள் என்று கூறினார். ஆனால், நாங்கள்தான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தின. அவர்கள் எங்களைத் தாக்கினார்கள்.

நாங்கள் பதிலடி கொடுத்தோம். ஆனால் ஒருபோதும் மக்கள் வசிக்கும் பகுதிகளை நாங்கள் தாக்கவில்லை.

நாங்களா பிராந்தியத்தின் அமைதியின்மைக்குக் காரணம்? நாங்கள் சுதந்திரமாக வாழ மட்டுமே விரும்புகிறோம்.

நாங்கள் தற்காத்துக்கொள்வதில் மட்டுமே!

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஈரான் எந்தவொரு நாட்டின் மீதோ அல்லது பகுதியின் மீதோ படையெடுத்ததில்லை. ஆனால் எங்களைத் தற்காத்துக்கொள்வதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் செயல்பட்டிருக்கிறோம்.

ஆனால் இப்போது, இந்தப் பிராந்தியத்தில் அமைதியின்மையை உருவாக்குவதாக எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. எங்களைப் பயங்கரவாதிகள் என்கிறார்கள்.

நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். அணு ஆயுதங்களுக்கு இடமில்லை. அதே சமயம் அமைதி வழி அணுசக்தித் தொழில்நுட்பத்திற்கு எந்தவொரு தடைகளும் இருக்கக்கூடாது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி...

ஹார்முஸ் நீர்ச்சந்தி பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஒரு நீர்வழியைச் சிலர் சுதந்திரமாகப் பயன்படுத்தித் தங்களது சுயநலன்களைப் பெற்றுக்கொண்டு,

அதே நீர்வழியைப் பயன்படுத்தி எங்கள் மீது ஆக்கிரமிப்புகளைத் திணிப்பதையும், எங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதையும்,

எங்களது சொந்த நீர்வழிப் பாதையில் நாங்களே செல்ல முடியாமல் தடுப்பதையும் எங்களால் அனுமதிக்க முடியாது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

மண்டியிடமாட்டோம்

எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது. நாங்கள் போரிடுவதற்கும் தற்காத்துக்கொள்ளவும் அஞ்சவில்லை என்பதை நிரூபித்துள்ளோம்.

தடைகள், தீவிர அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முன்னால் ஈரானிய மக்களின் எதிர்ப்பு மட்டுமே அதிகரிக்கும் என்பதை ட்ரம்ப் உணர வேண்டும்.

நாங்கள் ஒருபோதும் தலைவணங்கவோ மண்டியிடவோ மாட்டோம்” என்று பேசி, ஈரான் பேச்சுவார்த்தைக்கும் தயார் என்றும் உறுதிப்படுத்தியிருந்தார் மசூத் பெசெஷ்கியான்.

கச்சா எண்ணெய் விலை

ஈரான் அதிபர் ஈரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் குறித்துக் காட்டமாகப் பேசியிருந்ததால், Brent கச்சா எண்ணெயின் விலை நேற்று முன்தினம் ஒரு பீப்பாவிற்கு 100 டாலருக்குக் கீழ் குறைந்திருந்தது, நேற்று 100 டாலருக்கு மேல் எகிறியுள்ளது.

ட்ரம்ப் பேச்சு... மசூத் பெசெஷ்கியான் பேச்சுகள் என்னவாக இருந்தாலும், இப்போது ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே பாசிட்டிவ் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல் வெளியாகின்றன.

ஈரான் போர் விரைவில் முடியும் என்று நம்புவோம்!

"ரஷ்யாவில் சீன அதிபருக்குத்தான்... ரஷ்யப் போரில் இந்திய மக்களும்..!"- ஐ.நாவில் ஜெலன்ஸ்கி பேச்சு

தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.அந்தக் கூட்டத்தில் நேற்று ஜெலன்ஸ்கி பேசினார்.தற்போது உலகத்தில் நடந்துவரும் போர்களில் ரஷ்ய-உக்ரைன் போரும் மிக முக்கிய... மேலும் பார்க்க

`செல்வப்பெருந்தகை' வைத்த விமர்சனம் - பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன பதில்!

திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: "முதல்வர் அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்"- தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே வாசன்

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும்... மேலும் பார்க்க

"சிறு பிள்ளைக்குத் தெரியும் அரசியல்கூட த.வெ.க-வினருக்குத் தெரியவில்லை!" - இரா.முத்தரசன் வருத்தம்

'ஆட்சிக்கு ஆதரவு, அதேசமயம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டி' என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் த.வெ.க-வினரை கதிகலங்கச் செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அண்மைக்காலமாக த.வெ.க - கம்யூனிஸ்டு... மேலும் பார்க்க

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: மதுரைக்கு வரும் முதல்வர் விஜய் ; சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்... மேலும் பார்க்க

போட்டு கொடுத்த நேரு தரப்பு?| சிக்கலில் மருமகன் | அன்புமணிக்கு எதிராக ஸ்ரீகாந்தி ஸ்கெட்ச் | கழுகார்

கல்லாகட்டும் 'பழக்' கட்சி நிர்வாகிகள்!'"எங்க வாக்கு உங்களுக்குதான்..."மதுராந்தகம் இடைத்தேர்தலில் இலைக்கட்சிக்கு ஆதரவாக பழக் கட்சி இருக்குமென எதிர்பார்த்த நிலையில், தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்துவி... மேலும் பார்க்க