செய்திகள் :

ஏழு கடல் ஏழு மலை: "ராம் சார் படத்தில நடிக்க கொஞ்சம் பயமாக இருந்துச்சு, ஆனா.!"- நடிகர் சூரி

post image

ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சூரி, "முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், பாலா சார், ராம் சார், எல்லோரும் இருக்கிறார்கள்.

ஏழு கடல் ஏழு மலை படத்தில்...
ஏழு கடல் ஏழு மலை படத்தில்...

அவர்களுடன் எப்படியாவது பணியாற்றிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்தவகையில் வெற்றிமாறன் அண்ணனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பைத் தொடங்கினோம்.

அப்போது அன்பு தம்பி அருண் விஷ்வா மூலமா எனக்கு ராம் அண்ணன் பழக்கமானார். 'இந்த மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நடிக்கிறீர்களா?' என்று தம்பி அருண் விஷ்வா கேட்டார்.

நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்றேன். 'ராம் சார் சிறப்பாக சொல்லிக்கொடுப்பார்' என்றார். பிறகு அவர்களின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.

சிமென்ட்டிற்கு பதில் அலுவலகம் முழுவதும் புத்தகத்தை வைத்து பூசி இருந்தார்கள். எல்லாப் பக்கமும் புத்தகமாக இருந்தது.

நடிகர் சூரி
நடிகர் சூரி

பிறகு அவர் (ராம்) வந்தார் ஒரு இயக்குநர் மாதிரியே பேசவில்லை. ரொம்ப ஜாலியாக பேசினார். என்னைப் பற்றி நிறைய பேசினார். அவர் பேச பேச எனக்கு தைரியம் வந்துவிட்டது. அப்படித்தான் இந்தப் படத்தில் நடித்தேன்" என்று பகிர்ந்திருக்கிறார்.

OM: "ரஜினி சார் மீதான அளப்பரிய மரியாதையின் காரணமாக..." - தள்ளிப்போகும் 'ஓம்' படத்தின் ரிலீஸ்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓம்' திரைப்படம் அடுத்த மாதம் 16-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Dhanush - OM ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயில... மேலும் பார்க்க

"ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது" - நடிகை அம்பிகா ஓப்பன் டாக்

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை ம... மேலும் பார்க்க

"இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" - நடிகை அம்பிகா கண்ணீர்

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை ம... மேலும் பார்க்க

“பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்

நடிகர் சூரியின் 'மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான '... மேலும் பார்க்க

பெண்டிங்கில் சாய் `இசையில்' முதல் படம் `டு' பிரமாண்ட Pan India படம் - ராகவா லாரன்ஸின் பிஸி லைன்அப்!

ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக 'மஹாவீர் கர்ணா'வை அறிவித்திருக்கிறார்கள். பூஜ... மேலும் பார்க்க

The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" - பிரதீப்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. The Dark Heave... மேலும் பார்க்க