செய்திகள் :

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: மதுரைக்கு வரும் முதல்வர் விஜய் ; சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

post image

தவெகவின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தொடங்க போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் உசிலம்பட்டியில் வைத்து தொடங்கலாமா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  உசிலம்பட்டியில் பெண்களுக்கு சீர் கொடுக்கும் கலாச்சாரம் அதிகம் நடக்கும் பகுதியாக இருப்பதால் அதனால் இந்த திட்டத்தை உசிலம்பட்டியில் இருந்து துவங்கலாம் என நினைத்த அரசு அதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட்டது.

ஆனால் உசிலம்பட்டியில் அதிகளவிலான தெருக்கள் குறுகலாக இருப்பதால் முதல்வர் விஜய்யை காண வரும் கூட்டத்தை கட்டுபடுத்துவது சிரமமாகி விடும் என்பதால் மதுரையில் வைத்து தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு அரசு தரப்பில் முடிவெடுக்கபட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனை

தொடர்ந்து வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திங்ககிழமை மதுரைக்கு வரும் முதலமைச்சர் விஜய் ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கு குழந்தைகளுக்கு நேரடியாக சென்று தங்க மோதிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி ராஜாஜி மருத்துவமனையில் சுற்றிலும் சாலைகள் அமைக்கு பணிகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் மருத்துவமனைக்குள்ளும் கற்களை அமைக்கு பணிகளும், தூய்மை படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.!

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” - ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான். இந்தப் பயணம் நியூயார்க்கில் நடக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்திற்காக.ட்ரம்ப் ... மேலும் பார்க்க

"சிறு பிள்ளைக்குத் தெரியும் அரசியல்கூட த.வெ.க-வினருக்குத் தெரியவில்லை!" - இரா.முத்தரசன் வருத்தம்

'ஆட்சிக்கு ஆதரவு, அதேசமயம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டி' என்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் த.வெ.க-வினரை கதிகலங்கச் செய்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அண்மைக்காலமாக த.வெ.க - கம்யூனிஸ்டு... மேலும் பார்க்க

போட்டு கொடுத்த நேரு தரப்பு?| சிக்கலில் மருமகன் | அன்புமணிக்கு எதிராக ஸ்ரீகாந்தி ஸ்கெட்ச் | கழுகார்

கல்லாகட்டும் 'பழக்' கட்சி நிர்வாகிகள்!'"எங்க வாக்கு உங்களுக்குதான்..."மதுராந்தகம் இடைத்தேர்தலில் இலைக்கட்சிக்கு ஆதரவாக பழக் கட்சி இருக்குமென எதிர்பார்த்த நிலையில், தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்துவி... மேலும் பார்க்க

SIR சர்ச்சை: "பாஜக, RSS, தேர்தல் ஆணையம் ஆகியவை தேசத் துரோகம் செய்துள்ளன” - ராகுல் காந்தி

நேற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாள் தேர்தல் ஆணையம் குறித்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் உள்ள தேர்தல் ஆணையர்களுக்கு இடையே அதிருப்தி நிலவுகிறது என்று கூறப்ப... மேலும் பார்க்க

"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் திரும்பத் திரும்பக் கூறி வருவது ஒன்றே - “ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் அல்லது ஈரானை முற்றிலும் அழித்துவிடுவேன்” என்பதுதான்.நேற்று முன்தினம் (செப்... மேலும் பார்க்க