செய்திகள் :

'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' - எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!

post image

தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை வருமாறு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருக்கிறார்.

CM Vijay
CM Vijay

தீபாவளி தினமான கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் தவெக தலைமையிலிருந்து அவசர ஆலோசனைக் கூட்டத்திற்காக எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் அழைப்பு சென்றிருக்கிறது.

நாளை காலை அத்தனை எம்.எல்.ஏக்களும் சென்னையில் முகாமிட்டிருக்கும்படியும் ஆலோசனைக் கூட்டத்திற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தலைமையிலிருந்து காரணம் சொல்லாமல் திடீரென எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

TVK Vijay | விஜய்
TVK Vijay | விஜய்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பனையூர் வட்டாரத்தினர் சிலர், 'கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். அரசின் மீது அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நவம்பர் 13 ஆம் தேதிக்கு மேல் கொண்டு வர முடியும். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குத் திட்டமிட்டு எங்களின் எம்.எல்.ஏக்களைத் தூக்க எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டு வருகின்றனர். அதனால் எம்.எல்.ஏக்களைச் சந்தித்து தலைவரே சில ஆலோசனைகளை பெர்சனலாக வழங்கவிருக்கிறார்.

மேலும், சமீபத்தில் சில எம்.எல்.ஏக்களின் செயல்பாடு கடும் விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறது. அதுவும் முதல்வரை அப்செட் ஆக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் இந்தக் கூட்டத்தில் எச்சரிக்கையும் விடுக்கவிருக்கிறார்' என்றனர்.

ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? ``ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" - ஜோதிமணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

"பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று நியாயப்படுத்தலாமா?"- ராஜ்மோகனுக்கு அதிமுக கண்டனம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இத... மேலும் பார்க்க

``தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" - அண்ணாமலை

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?" - கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைத்தளப் பதிவில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்... மேலும் பார்க்க

பயிர்க் கடன் பெறுவதில் சிக்கல்... புதிய நிபந்தனைகளால் பரிதவிக்கும் குத்தகை விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் சுமார் 40 சதவிகிதத்தினர் குத்தகை நிலங்களில்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இல்லையென்றால், தமிழ்நாட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் மரணம் - காப்பகத்தின் அலட்சியத்தால் விபரீதம்?

திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் ஆணாய்பிறந்தான் கிராமம் உள்ளது. இங்கு, தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் அங்கீகாரம்பெற்ற `டெர்ரே டெஸ் ஹோம்ஸ் ( TDH CORE ) கோர் ட... மேலும் பார்க்க