செய்திகள் :

நீங்கள் செல்வந்தராக வேண்டுமா? வீட்டில் செல்வம் பெருகிட சாஸ்திர நூல்கள் சொல்லும் 9 எளிய வழிமுறைகள்!

post image

1. இனிப்பு (கல்கண்டு): இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத் துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு, வெல்லம் போன்ற இனிப்புப் பொருள்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக் கும். ஆகவே, வீட்டில் ஏதேனும் ஒரு இனிப்புப் பொருளேனும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கை இனிக்கும் படி மகாலட்சுமிதேவி அருள்புரிவாள்.

2. மஞ்சள்... குங்குமம் மங்கலத்தின் அடையாளம். வீட்டுப் பூஜையறையில் மஞ்சள் கொண்டு பிள்ளையார் சுழி போட்டு வைப்பது விசேஷம். வீட்டுக்கு விருந்தினராக வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள்-குங்குமத்தைத் தாம்பூலத்துடன் அளிப்பதால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

3. கல் உப்பு : பாற்கடலில் பிறந்தவள் மகாலட்சுமி. உப்பும் கடலிலிருந்து கிடைப்பது. ஆகவே, உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாகப் போற்றப்படுகிறது. வீட்டில் எப்போதும் கல் உப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

4. பஞ்சலட்சுமி அடையாளங்கள் என்று ஐந்து விஷயங்களை எடுத்துச்சொல்கின்றன ஞானநூல்கள். அவை: தேன், நாணயங்கள், பால், தாமரை, தானியக் கதிர். இவற்றில் நாணயங்களை லட்சுமியா கவே பாவித்து வணங்குதல் நலம். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடைகள், போட்டிகள் எல்லாம் நீங்கி லாபம் கிட்டும்.

வில்வம்

5. வில்வம் இலை: வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு ‘லட்சுமி வாசம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக் கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

6. தாமரை: வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இப்படிச் செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.

7. கஜலட்சுமி: யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும் மகாலட்சுமி, அந்த இடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்பது நம்பிக்கை. ஆகவே வீட்டில் கஜலட்சுமி படம் வைத்து பூஜிப்பது நல்லது. அதேபோல் நிலைப்படிகளில் மரவேலைப்பாடாக கஜலட்சுமி வடிவைப் பதிக்கலாம்.

8. அஷ்ட மங்கலப் பேழை வீட்டில் இருப்பது விசேஷம் என்பார்கள். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்திட வேண்டுமெனில் எண்வகை மங்கலப் பொருள்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்துத் தினமும் வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஞான நூல்கள், அந்தப் பொருள்களையும் பட்டியலிடுகின்றன. அவை: குங்குமச் சிமிழ், சந்தனம், தாம்பூலம், கொட்டைப்பாக்கு, சங்கு, கண்ணாடி, காமாட்சி விளக்கு, தாமரை. இவை வீட்டில் இருந்தாலும் பெண்களால் வழிபடப்பட்டாலும் அதனால் மகாலட்சுமி ஈர்க்கப்படுவாள் என்கிறது அறப்பளீச சதகம்.

பெளர்ணமி, வெள்ளிக்கிழமை, பூர நட்சத்திரம், அஷ்டமி திதி ஆகிய நாள்களில் அஷ்ட மங்கலங்களை வைத்துப் பூஜை செய்து வந்தால் இல்லத்தில் வறுமை நெருங்காது, தன வரவுக்குக் குறை இருக்காது.

9. செல்வம் தரும் பதிகம்: சகலவிதமான ஐஸ்வர்யங்களுக்கும் ஈசனே அதிபதி என்று சிறப்பிக்கும் விதமாக, புராண நூல்கள் அவரை `ஐஸ்வர்ய ஈஸ்வரர்’ எனப் போற்றுகின்றன. குபேரனுக்கு நவநிதிகளும் அருளிய அந்த ஈசனைப் பதிகம் பாடி வழிபடுவது விசேஷம். குறிப்பாக... ‘செல்வம்’ என்ற சொல் 7 முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய - கீழ்க்காணும் பாடலை தினமும் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் - பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் ஸித்திக்கும்.

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்

செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!

திருமணம் தள்ளிப்போகிறதா... மதுரையில் நடக்கும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

மதுரையில் வரும் 17 ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த நாளில் லட்சக்கணக்கானவர்கள் மதுரையில் திரள்வார்கள். அப்படிப்பட்ட புண்ணியமான நாளில் விகடனும் வாசகர்களி... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: 12 ராசிகளுக்கும் பிரத்யேக விநாயகர் வழிபாடு! எந்த ராசிக்கு என்ன வழிபாடு?

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, 12-ல் சனி. மேலும் ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் நிலைப்படி. வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள், அம்மன் கோயிலில் அருளும் விநாயகருக்குப் பாலபிஷேகம் செய்யவேண்டும... மேலும் பார்க்க

ஆபரண யோகம் தரும் சுவர்ண கெளரி பூஜை: விநாயகர் சதுர்த்திக்கு முன்பு செய்யவேண்டிய அம்பாள் பூஜை!

நம் நாட்டில் முக்கியமான பண்டிகை தினங்களை ஒட்டியவாறு அமையும் கௌரி விரதங்களைப் பெண்கள் நோற்பது வழக்கம். கௌரியின் திருவடிவங்கள் 108. இவை அனைத்திற்கும் தனித் தனியான பூஜை முறைகள் உண்டு. ஆயினும், நம் முன்னோ... மேலும் பார்க்க

Anbe Sivam - 3 | மரணத்தில் இட ஒதுக்கீடு கேட்டவர்| அன்பே சிவம் | தவத்திரு பொன்னம்பல அடிகளார்!

இன்றைக்கெல்லாம் எல்லாவற்றுக்கும் ஒரு தினம் வந்துவிட்டது. அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், நண்பர்கள் தினம் என்று பல்வேறு தினங்களைக் கொண்டாடுகிறோம். காலம் முழுவதும் நிலைத்திருக்க வேண்டிய உற... மேலும் பார்க்க

ஈசன் அம்பிகையைத் திருமணம் செய்துகொண்ட தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்... திருமணம் கைகூடும்!

ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஒரு சிறப்பு உண்டு. சில கடன் பரிகாரத்தலமாகத் திகழும். சில செல்வ வளம் அருளும். ஒருசில நோய் தீர்க்கும் தலமாகத் திகழும். சில தலங்கள் திருமண வரம் தரும் தலங்களாக அறியப்படும். அப்படித் ... மேலும் பார்க்க

அன்பே சிவம் - 2 | நம் வேண்டுதல்களைக் கொட்டுகிற இடமா கோயில்கள்? | தவத்திரு பொன்னம்பல அடிகளார்!

இப்போதெல்லாம் கோயிலுக்குப் போகிறோம். மனம் ஒருமைப்படுவதில்லை. நமக்கு நிறைய பிரச்னைகள், நிறைய தேவைகள். நம்முடைய எல்லாத் தேவைகளையும் கொண்டு வந்து கொட்டுகிற இடமாகத் திருக்கோயிலை மாற்றிவிடுகிறோம். கருவறையி... மேலும் பார்க்க