செய்திகள் :

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார்.

விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுகவினர் பல்வேறு இடங்களில் நேற்று (செப்டம்பர் 12) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அங்கே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார். ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பின.

ஆ.ராசா பதிவு
ஆ.ராசா பதிவு

ஆ.ராசா பதிவு

இதையடுத்து, ஆ.ராசா தனது பேச்சிற்கு விளக்கம் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;

என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை.

நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்”.

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க

``எச்.ராஜா, ஆ.ராசா... என்ன வித்தியாசம்?” - பெண்கள் குறித்த பேச்சிற்கு வன்னி அரசு கண்டனம்

திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதைக் கொச்சைப்படுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசியதாக நேற்று திமுக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியது. சென்னை சைதாப்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா தாக்குதல்: 'மனிதநேயம் இருந்தால் 'இதை' தடுத்து நிறுத்துவார்களா?' - ஈரான் அதிபர் காட்டம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா தெற்கு ஈரானில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானிய மக்களும் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்ப... மேலும் பார்க்க

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்திருக்கும் ஜி ஜின்பிங்; மோடி - ஜி ஜின்பிங் என்ன பேசினார்கள்?

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காகப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருவர். இந்தியா, சீனா மோதல்2019-ம் ஆண்டு ஜின்பிங் கடைசியாக இந்தி... மேலும் பார்க்க

'ஆல் தி பெஸ்ட் நண்பா!' - ரேஸை தொடங்கி வைத்த விஜய்; சீறிப் பாய்ந்த அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார். AK - Vijayமுதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் விஜய்,... மேலும் பார்க்க

'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' - குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார். முன்னதாக சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யும் அஜித்... மேலும் பார்க்க