'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - திருச்சீரலைவாய் தல புராணம் முதல் கந்த சஷ்ட...
நூல் கொள்முதல் விவகாரம்: ``Family Fund; முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்"- அமைச்சர் அருண் ராஜ்
சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளால் ஏற்படும் தீக்காயங்கள் மற்றும் விபத்துகளுக்கு உடனடிச் சிகிச்சை அளிக்கும் வகையில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் அவசரச் சிகிச்சை மருத்துவ ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் முழுவதும் 108 அவசர ஊர்தி மையத்திற்கு மொத்தம் 1,679 அழைப்புகள் வந்துள்ளன.

நான் மருத்துவம் படித்த காலத்தில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன, ஆனால் தற்போது அரசு மற்றும் தனியார் சேர்த்து கிட்டத்தட்ட 80 மருத்துவக் கல்லூரிகள் வரை இயங்கி வருகின்றன. எனவே, நிர்வாகத்தை எளிதாக்க மண்டல அளவில் 'மண்டல மருத்துவக் கல்வி இயக்குநர்களை' (Regional DME) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவச் சங்கங்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னரே இந்த நான்கு மண்டல மருத்துவக் கல்வி இயக்குநர்களை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க-வினர், அவர்களுடைய ஆட்சியில் கொள்முதல் செய்யவில்லை என்கின்றனர். கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆதாரத்துடன் நேற்று விவரமாக எடுத்துரைத்துள்ளார். பிப்ரவரி மாதம் கொள்முதல் செய்யப்பட்டு, மார்ச் மாதம் கருவூலத்தில் இருந்து பணம் சென்றுள்ளது தெரிகிறது. பேமிலி பண்ட் தவறு செய்த பின்னரும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல், மற்றவர்கள் மீது பழி போடுவதை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். மறக்கவும் மாட்டார்கள்.

திமுக-வுக்கு இது மிகப்பெரிய களங்கம். பெரியார், அண்ணா பெயரை வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு குடும்பமே நல்லா இருக்கனும், ஒரு குடும்பம் மட்டுமே கொள்ளை அடிச்சி..,அதை பார்ட்டி பண்ட் என்று சொல்வது தவறு. பார்ட்டி பண்ட் என்றால் ஒட்டுமொத்த நிர்வாகிகளுக்கு செல்லும். பேமிலி பண்ட் ஆக கலெக்ட் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள திமுக-வினர் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். ஒரு குடும்பம் மட்டும்தான் நல்லாயிருந்து, பேமிலி பண்ட்-க்காக மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தார்கள்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














