செய்திகள் :

190 குழந்தைகளின் மரணம்... மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை!

post image

கடவுளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகப் பசியுடன் இருந்தால் சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்று கூறி, தன்னைப் பின்பற்றியவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்த மதக்குழுத் தலைவருக்கு கென்ய நீதிமன்றம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கென்யாவைச் சேர்ந்த பால் மெக்கன்சி (Paul Mackenzie) என்பவர் 'Good News International Church' என்ற அமைப்பை நடத்தி வந்தார். உலகம் விரைவில் அழியப்போகிறது என்றும், அதற்கு முன்பாக இயேசுவைச் சந்திக்க வேண்டுமென்றால் உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பல குடும்பங்கள், தங்களது குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

Paul Mackenzie

குழந்தைகளுக்கு முதலில் உணவு மறுக்கப்பட்டதாகவும், பின்னர் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் பட்டினி கிடக்க வற்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தவர்களை அவருடன் இருந்தவர்கள் தாக்கியதாகவும், தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2023-ம் ஆண்டு கென்யாவின் ஷகஹோலா (Shakahola) வனப்பகுதியில் இருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டபோது இந்தச் சம்பவம் உலகையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த வழக்கில் 190 குழந்தைகள் மற்றும் ஓர் வயது வந்தவர் என மொத்தம் 191 பேரின் மரணத்திற்காக மெக்கன்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

Paul Mackenzie

2026 நவம்பர் 6-ம் தேதி மொம்பாசா உயர் நீதிமன்றம் அவருக்கு பட்டினியால் ஏற்பட்ட கொலைகளுக்காக 100 ஆண்டுகளும், நேரடிக் கொலைகளுக்காக 100 ஆண்டுகளும் என மொத்தம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவருடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 28 பேருக்கும் வெவ்வேறு கால அளவுகளில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

Paul Mackenzie

இந்தச் சம்பவத்தில் ஷகஹோலா வனப்பகுதியில் மட்டும் 448 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 52 மரணங்கள் தொடர்பாக மெக்கன்சி மீது தனியாக வழக்கும் நிலுவையில் உள்ளது.

மத நம்பிக்கையின் பெயரில் மக்களின் உயிரையும், குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்பையும் பறிக்கும் செயல்களுக்கு எதிராக இந்தத் தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

"சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?"- எடப்பாடி விமர்சனம்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர்... மேலும் பார்க்க

'சண்டியர்': பிடிவாத கமல்... பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! - கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அண்மையில் வெளியி... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி

'முரசு' புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆளும் தவெக அரசு முன்னெச... மேலும் பார்க்க

‘சண்டியர் என படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே ஓட வேண்டியிருக்கும்’ - டாக்டர் கிருஷ்ணசாமி!

கோவை குனியமுத்தூரில் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுபேசிய அவர், “மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் புதிதாக எடுக்கும் படத்... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை.!'- திமுக பரந்தாமன்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர... மேலும் பார்க்க

பொன்னமராவதி: தேங்கும் கழிவுநீர்; நோய் பரவல் அபாயத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! - தீர்வு காணப்படுமா?

வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தற்கா... மேலும் பார்க்க