செய்திகள் :

இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!

post image

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கு காடி ஐசென்காடுக்கு (Gadi Eisenkot) அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்திருக்கிறார். இது நெதன்யாகுவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்களில் ஆட்சி அமைப்பதற்கு 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலுக்குப் பின்பு காடி ஐசென்காட்க்கு 67 உறுப்பினர்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

Gadi Eisenkot
Gadi Eisenkot

அதேவேளையில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சிக்கு 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

7 உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகித்துள்ளனர். அதிபர் மாளிகையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வைத் தொடர்ந்து, காடி ஐசென்காட்க்கு கூட்டணி ஆட்சியை அமைக்க 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். மேலும் 14 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படலாம்.

நெதன்யாகு
நெதன்யாகு

குறிப்பிட்ட 6 வார அவகாசத்திற்குள் அவரால் அறுதிப் பெரும்பான்மையுடன் கூட்டணியை உருவாக்க முடியாவிட்டால், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மீண்டும் மற்றொரு தலைவருக்குச் செல்லும் அல்லது இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலைச் சந்திக்க நேரிடும். இஸ்ரேலின் ராணுவப் படைத் தலைவராகப் பணியாற்றிய காடி ஐசென்காட், நெதன்யாகுவின் போர்க்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை பெரியார் அறிவுலகம்: புத்தக கொள்முதலில் முறைகேடு? - சர்ச்சையான தமிழ் புத்தங்கள்... Album

கோவை பெரியார் அறிவுலகம்கோவை பெரியார் அறிவுலகத்தின் தமிழ் புத்தகங்கள் பிரிவு கோவை பெரியார் அறிவுலகத்தின் தமிழ் புத்தகங்கள் பிரிவு கோவை பெரியார் அறிவுலகத்தின் தமிழ் புத்தகங்கள் பிரிவு கோவை பெரியார் அறிவ... மேலும் பார்க்க

நெல்லை: தாமிரபரணி ஆறு, கால்வாய்களில் திட்டப் பணிகள்; ஆய்வு செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் | Photos

நெல்லையில் ஆறு, கால்வாய் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்.!'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன? மேலும் பார்க்க

`அடித்து ஆடும் ஸ்டாலின்... அறிக்கை மோடில் உதயநிதி!' - கொதிக்கும் உடன்பிறப்புகள்!

த.வெ.க-வுக்கு எதிர் அரசியல் செய்வதில் தி.மு.க தலைவர் பட்டாசாய் வெடித்துவரும் நிலையில் பூஸ்வானமாகப் போயிருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசியல் நகர்வுகள். 'தலைவரே இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும்போ... மேலும் பார்க்க

"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" - மு.க. ஸ்டாலின் தாக்கு!

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்யையும், தவெக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்காகத் தற்போது அவர் கோவைக்குச் சென்றிர... மேலும் பார்க்க

``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு..." - சு.வெங்கடேசன்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாள... மேலும் பார்க்க

ராணியின் நினைவாக உருவான `ராணிப்பேட்டை' - ரூ.2.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராஜா – ராணி மண்டபம்!

300 ஆண்டுக்கால வரலாற்றுச் சின்னம்... காலத்தின் சுவடுகளைப் பாதுகாக்க நடைபெறும் புனரமைப்புப் பணிகள்!ஓர் ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கும். சில ஊர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஒரு மன்னரின்... மேலும் பார்க்க