Gym Guys! Half Boil, பச்சை முட்டை சாப்பிடாதீங்க; 'இந்த' முறையில் சாப்பிடுவது தான...
Kannan Ravi: "ஆடம்பர திருமணம் அவசியம்; ஐதீகப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?" - கண்ணன் ரவி
நடிகர் பிரபுதேவாவும் வடிவேலுவும் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் 'பேங் பேங்' திரைப்படம் ரிலீஸிற்குத் தயாராகி வருகிறது. இப்படத்தைத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. சமீபத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இல்லத் திருமண விழா பிரமாண்டமாக நடந்திருந்தது.
திருமணம் குறித்தும், ஐதீக முறைப்படி திருமணம் நடத்தியது குறித்தும் கண்ணன் ரவி பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "நான் ஒரு இந்துதானே? ஒரு முஸ்லிம் தங்களின் மசூதியிலும், ஒரு கிறிஸ்தவர் அவர்களின் தேவாலயத்திலும் தங்களது திருமணங்களை நடத்துகிறார்கள். அப்படியிருக்கும்போது ஒரு இந்துவாக, எனது திருமணத்தை இந்து ஐதீகப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது? இது அரசியல் கட்சி சார்ந்த விஷயம் கிடையாது.
முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட விஷயம். திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் எனக்கு எந்தவித குறுகிய மனப்பான்மையோ, தாழ்வு மனப்பான்மையோ கிடையாது.
தைரியமாகச் சொல்கிறேன், மீண்டும் திருமணம் நடந்தாலும் அதேபோல இந்து ஐதீகப்படிதான் நடக்கும். அந்தந்த மொழிக்கும், அந்தந்த இனத்திற்கும் என்ன உரிமை இருக்கிறதோ, அதேபோல என் மதத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய உரிமையை யார் தடுத்தாலும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.
கட்சிச் சார்பு பற்றிப் பேசுபவர்களுக்கு நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். இன்றைக்கு எத்தனை பேர் கோயிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்? எந்தெந்தக் கட்சியில் என்னென்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக தொடக்கத்திலிருந்து இன்று வரை எல்லாரின் வீடுகளிலிருந்தும் மனைவியும் பிள்ளைகளும் கோயிலுக்குத்தானே போய்க்கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் சொந்தக் குடும்பத்தையே கட்டுப்படுத்த முடியாதவர்கள் எதற்காக வெளியே வந்து பேச வேண்டும்?
எனக்கு எதிராக யார் அறிக்கை கொடுத்தார்களோ, அவர்களைச் செக் செய்து பார்த்தால் உங்களுக்கே உண்மை என்னவென்று புரியும். துரைமுருகன் கூடக் கட்சியின் கொள்கைப்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்றுதான் சொன்னார்.

ஆனால் நான்தான் அதனை மறுத்து, 'என் விருப்பப்படியும், என் மனைவியின் விருப்பப்படியும் தான் திருமணம் நடக்கும்' என மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் நின்றேன்" என்றவர், "என் திரைப்படங்களில் பெரும்பாலும் புதிய இயக்குநர்களுக்குத் தான் வாய்ப்பு கொடுக்கிறேன்.
என்னைப்போல ரிஸ்க் எடுப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. எனது அடுத்தடுத்த படங்களில்கூடப் பெரிய நடிகர்களோ அல்லது பெரிய இயக்குநர்களோ கிடையாது. திரையுலகில் இறங்கிப் போராடுபவர்களை வைத்துதான் படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
அதேபோல, ஆடம்பரத் திருமணம் கண்டிப்பாக அவசியம். நான் இந்தத் திருமணத்தை வெளிநாட்டில் நடத்தி, அந்தப் பணம் எங்கேயோ போயிருந்தால் உங்களுக்குச் சந்தோஷமா? ஆடம்பரம் என்று எதைச் சொல்கிறீர்கள்? முன்னொரு காலத்தில் நடந்து போனார்கள்.
இன்றைக்கு நீங்கள் எதற்காகப் பைக்கையும் காரையும் தேடுகிறீர்கள்? எதற்காக விமானத்தில் போகிறீர்கள்? உங்களின் வளர்ச்சி கூடும்போது வசதிகளை மாற்றிக்கொள்வது மனித இயல்புதானே" எனப் பேசியிருக்கிறார்.





















