செய்திகள் :

பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி

post image

'முரசு' புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆளும் தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புயல் வரும் சமயத்தில் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

உதயநிதி
உதயநிதி

அதே நேரத்தில், கூண்டில் ஆபத்தை உணர்த்தும் கொடியை ஏற்றியிருக்க வேண்டும். ஆனால், இது போன்ற எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொள்ளவில்லை.

கடந்த திமுக ஆட்சியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. ஆனால், இந்த தவெக அரசு மீனவர்கள் மீது எந்தவித அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அரசு அறிவித்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை போதாது, மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

கோவை பெரியார் அறிவுலகம்
கோவை பெரியார் அறிவுலகம்

தொடர்ந்து பெரியார் நூலக முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த உதயநிதி , " பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணைக்கு நாங்கள் தயார். திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். புத்தக ஆசிரியர்களின் பெயர்களை வைத்தே எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது எனத் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.

‘சண்டியர் என படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே ஓட வேண்டியிருக்கும்’ - டாக்டர் கிருஷ்ணசாமி!

கோவை குனியமுத்தூரில் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுபேசிய அவர், “மூத்த நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் புதிதாக எடுக்கும் படத்... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை.!'- திமுக பரந்தாமன்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர... மேலும் பார்க்க

பொன்னமராவதி: தேங்கும் கழிவுநீர்; நோய் பரவல் அபாயத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! - தீர்வு காணப்படுமா?

வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தற்கா... மேலும் பார்க்க

உயர்மட்ட குழு கலைப்பு: "தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது"- திமுக அறிக்கை

கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு கலைத்திருக்கிறது. இதற்கு திமுக... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல!' - சேகர்பாபு

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நி... மேலும் பார்க்க

ஒன்றிய - மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" - சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அந்தக் குழுவைக் கலைத்துள்ளது தவெக அரசு. தவெக அரசி... மேலும் பார்க்க