செய்திகள் :

ராஜஸ்ரீ: உயிருக்குப் போராடும் பாரதிராஜா பட நாயகி... தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

post image

இயக்குநர் பாரதிராஜாவின் 'கருத்தம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஜஸ்ரீ. முதல் படப் பெயரே அவரது அடையாளமாகவும் மாறிப்போனது. 'கருத்தம்மா' ராஜஸ்ரீயாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவருக்கு, இயக்குநர் பாலாவின் 'சேது' மற்றும்  'நந்தா' படங்கள்  பெயர் சொல்ல வைத்தன.

முன்னணி இயக்குநர்கள், முக்கியப் படங்களில் நடித்தும், தமிழ்த் திரையுலகில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.  பிறகு சின்னத்திரைக்கு இடம்பெயர்ந்தார்.  'கங்கா, யமுனா, சரஸ்வதி', 'ஆலயம்', 'அகல் விளக்கு', 'மந்திர வாசல்', 'சிவமயம்' என வரிசையாக சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

இடைப்பட்ட காலத்தில் கல்யாணம், அதையடுத்த மணமுறிவு, மறுமணம், குழந்தைப் பிறப்பு என இவரது தனிப்பட்ட வாழ்வில் நல்லதும் கெட்டதுமாக நிறைய நிகழ்வுகள்...  பல காலமாக நடிப்பிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

'கருத்தம்மா' ராஜஶ்ரீ

இந்நிலையில், 49 வயதாகும் ராஜஸ்ரீக்கு, திடீர் உடலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் சொல்கின்றன. 

சிறுநீரகச் செயலிழப்பு (கிட்னி ஃபெயிலியர்) காரணமாக, படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நடிகை ராஜஸ்ரீ.  அவர் மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் காத்திருக்கிறார்கள் நண்பர்களும் உறவினர்களும். 

மீண்டு வரட்டும்... மீண்டும் வரட்டும்!

ரோஜா பாட்டி முதல் குணச்சித்திர ராணி வரை! – வத்சலா ராஜகோபாலின் கலைச் சரித்திரம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நடிகை அசின்: 7 வயது மகளுக்கு 12 மொழிகள் தெரியுமா? ஆச்சர்ய திறமையின் உண்மை பின்னணி!

குழந்தைகள் உணவு உண்ண வேண்டுமென்றாலும், அழுகையை நிறுத்த வேண்டுமென்றாலும் ஸ்மார்ட்போன்களும் யூடியூப் காட்சிகளும் கட்டாயமாகிவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால், நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் ந... மேலும் பார்க்க

"யாரு...?" - மூர்த்தி...தன்ராஜ்... மற்றும் பலர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

BB Tamil 10: விஜய் சேதுபதி இல்லை... இந்த வாரம் இவர்தான் ஹோஸ்ட்டா?!

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த சீசனின் ஹோஸ்ட் நடிகர் விஜய் சேதுபதி.பிக்பாஸ் புதிய சீசனின் அறிமுக நாள், இறுதி நாள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வார இறுதியிலும், அந... மேலும் பார்க்க

Deva: தேவாவின் நினைவுகளைச் சுமக்கும் தாய் பெயரிலான பண்ணை தோட்டம்; நல்லடக்க ஏற்பாடுகள் தீவிரம்!

`மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இறுதி அஞ்சலியில் அரசு மரியாதை வழங்கப்படும்’ என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, தேவாவின் சொந்த கிராமமான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள மாங்காடு சக்க... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனா: "என் கஷ்டங்களுக்கு இந்த புன்னகையே போதும்!"- 400 குடும்பங்களை தத்தெடுத்த பின்னணி!

திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் மனிதநேயமிக்க ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். பின்தங்கிய 400 குடும்பங்களின் ஒரு வருடப் பசியைப் போ... மேலும் பார்க்க