செய்திகள் :

மும்பையில் அனுமதியின்றி பஸ் நிறுத்தத்தை நீக்கிவிட்டு புது பஸ் நிறுத்தத்தை நிறுவிய சிவசேனா எம்.எம்.ஏ

post image

மும்பை முழுக்க பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தங்கள் மும்பை மாநகராட்சியின் நிதியில் கட்டப்படுகிறது. அதில் மாநகராட்சி சின்னம் மற்றும் பஸ்கள் வரும் நேரம் குறித்த அறிவிப்பு போன்றவை இடம் பெற்று இருக்கும். மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்றை மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் நிர்வாகம் கட்டி இருந்தது. இந்த பஸ் நிறுத்தம் திடீரென காணாமல் போய்விட்டது. அதேசமயம் அந்த இடத்தில் புதிய பஸ் நிறுத்தம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதில் சிவசேனா எம்.எல்.ஏ முர்ஜி பட்டேல் புகைப்படம் மற்றும் அவரது பெயர் இடம் பெற்று இருந்தது. மாநகராட்சியின் அனுமதி இன்றி அந்த பஸ் நிறுத்தத்தை அகற்றிவிட்டு தானாக புதிய பஸ் நிறுத்ததை தயாரித்து நிறுவி இருந்தார்.

அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பட்டேல் இந்த பஸ் நிறுத்தத்தை கட்டி இருந்தார்.

அதில் மும்பை மாநகராட்சியின் சின்னமும் இடம் பெற்று இருந்தது. ஏற்கனவே இருந்த பஸ் நிறுத்தம் திடீரென இரவோடு இரவாக காணாமல் போய் விட்டது. பஸ் நிறுத்தம் காணாமல் போனதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இதை அடுத்து முறைப்படி போலீஸில் புகார் செய்துள்ளது. அதேசமயம் எம்.எல்.ஏ. முர்ஜி இந்த பஸ் நிறுத்தத்தை தானாக முன்வந்து நிறுவியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பட்டேல் கூறுகையில்,''இங்கு எந்த சட்டவிரோதப் பணியும் நடைபெறவில்லை. பழைய பேருந்து நிறுத்தத்தை அகற்றிவிட்டு புதியதைக் கட்டுவதற்குத் பெஸ்ட் மற்றும் மாநகராட்சியிடமும், வார்டு அலுவலகத்திலும் முறையான அனுமதிகளையும், தடையில்லாச் சான்றிதழ்களையும் நாங்கள் பெற்றுள்ளோம். பேருந்து நிறுத்தத்தைப் புதுப்பிக்க சட்டமன்ற உறுப்பினர் நிதி பயன்படுத்தப்பட்டது. எனது ஒதுக்கீட்டிலிருந்து இந்தப் பணிக்கு நிதியளிக்கப்பட்டதால் அதில் எனது பெயர் இடம்பெற்று இருந்தது. எந்தவொரு சட்டவிரோதச் செயலையும் செய்யவில்லை''என்று தெரிவித்தார்.

இது குறித்து மாநகராட்சி பெஸ்ட் குழு தலைவரான, சிவசேனாவைச் சேர்ந்த த்ருஷ்ணா விஸ்வஸ்ராவ் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மூலம் பெஸ்ட் நிர்வாகம் வருமானம் ஈட்டி வருகிறது. பேருந்து நிறுத்தங்களை அனுமதியின்றி மீண்டும் கட்டுவது அல்லது மாற்றுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'தூங்கியும் சம்பாதிக்கலாம்' - 60 நாட்கள் தூங்கி ரூ.9.6 லட்சம் வருமானம் ஈட்டிய பெண்

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தூங்குவதை லாபகரமான வாய்ப்பாக மாற்றி, தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.6 லட்சம் பெற்றுள்ளார். வேக்பிட் என்ற நிறுவனம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்து இருந்தது. அ... மேலும் பார்க்க

நெல்லை: களைகட்டிய தீபாவளி விற்பனை; பட்டாசு, ஐவுளி கடைகள், சந்தைகளில் நிரம்பிய மக்கள் கூட்டம் |Album

நெல்லையில் களைகட்டிய தீபாவளி விற்பனை! பட்டாசு,ஐவுளி கடைகள், சந்தைகளில் நிரம்பிய மக்கள் கூட்டம் மேலும் பார்க்க

60 நாள்கள் தூக்கப் போட்டி... ரூ.9.6 லட்சம் பரிசு வென்ற மும்பை இளம்பெண்!

தூங்குவதற்காகவே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம்! இந்தியாவின் பிரபல மெத்தை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான Wakefit நடத்திய வித்தியாசமான 'Sleep Internship' போட்டியில் மும்பையைச் ... மேலும் பார்க்க

சேலம்: 20 கிலோ உலர் பழங்கள் கொண்டு 200 கிலோவில் தயாராகும் கிறிஸ்துமஸ் பிளம் கேக்! | Album

சேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணி நடைபெற்றதுசேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணி நடைபெற்றதுசேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பணி நடைபெற்றதுசேலத்தில் பிரம்மாண்டமான கேக் தயாரிப்பு பண... மேலும் பார்க்க

பருத்திப்பால், கருப்பு கவுனி, இளநீர் அல்வா.. திருநெல்வேலியில் மணக்கும் விதவிதமான அல்வாக்கள்! | Album

தீபாவளி:பருத்திபால்,கருப்பு கவுனி, இளநீர் அல்வா என திருநெல்வேலியில் மணக்கும் விதவிதமான அல்வாக்கள்.! மேலும் பார்க்க

கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?- இந்த கோர்ஸைப் பத்தியும் தெரிஞ்சுக்கோங்க பாஸ்; கோவாவில் புது முயற்சி!

ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் படிக்கிறோம். விரும்பிய துறையில் சாதிக்கப் பல பயிற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் இணைந்து பயணிக்கப் போகும் திருமண வாழ்க்கைக்காக எ... மேலும் பார்க்க