செய்திகள் :

நெல்லை: `நான் சொல்ற இடத்துக்கு போயிட்டு வாங்க' - ஹெல்மெட் அணியாத SI ; நூதன தண்டனை வழங்கிய டி.ஐ.ஜி!

post image

இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்குபவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தலையில் காயம் ஏற்படுகிறது. இதில், 40 சதவிகிதம் பேர் உயிழப்பதாக தெரியவந்துள்ளது. ஹெல்மெட் அணிந்து பயணித்தால் சிறிய காயங்களுடன் உயிர்தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தலைக்கவசம் அணியாமல் ஏற்படும் இருசக்கர வாகன விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கும் மொத்த சாலை விபத்து மரணங்களுடன் ஒப்பிடுகையில், இருசக்கர வாகன விபத்துகளில் இறப்பவர்களில் சுமார் 87 சதவிதம் பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் பொதுமக்களிடம் இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படாத நிலையே இருக்கிறது.

இந்த நிலையில், இருசக்கர வாகங்களில் பயணம் செய்பவர்கள், தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை நெல்லை சரகத்துக்கு உள்பட்ட குமரி, தென்காசி, தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் காவல்துறை டி.ஐ.ஜி-யான திருநாவுக்கரசு ஏற்படுத்தி வருகிறார்.

தலைக்கவசம் அணியாமல் சென்றால், காவல்துறையினர் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் நேர விரயம் ஏற்படுவதோடு, அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காசி ராஜா

அதனால் பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்கப் பழகி விட்டனர். ஆனாலும், காவல்துறையினர், அரசுத் துறையினர் என சிலர் மட்டும் தங்களுக்கான சலுகையாகக் கருதி, ஹெல்மெட் அணிவதைத் தவிர்த்து வருகிறார்கள். அப்படியே, காவல்துறை வாகனத் தணிக்கையில் பிடிபட்டாலும் போலீஸாரிடம் பேசிச் சமாளித்துக் கொள்ளும் போக்கு உள்ளது.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் சஷ்டி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யச் சென்ற நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, செய்துங்கநல்லூர் பகுதியில் காவல்துறை உடை அணிந்த ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வதைக் கண்டார். உடனடியாக அவரை நிறுத்தி விசாரித்ததில், செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் காசி ராஜா என்பது தெரியவந்தது. அவரிடம் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து அறிவுறுத்திய டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைக்காய சிகிச்சை பிரிவை நேரில் சென்று பார்வையிட்டு வருமாறு உத்தரவிட்டார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைக்காயை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் அனுபவிக்கும் வேதனை, அவர்களின் உறவினர்கள் படும் துன்பங்கள் ஆகியவற்றை சிறப்பு எஸ்.ஐ-யான காசிராஜா நேரில் கண்டார்.

இது குறித்து கூறிய அவர், " இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்கிய பலருக்கும் தலையில்தான் அடிபட்டு உள்ளது. சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதையும் பார்த்தேன். காயமடைந்தவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்காக உறவினர்கள் படும் கஷ்டம் அதிகம்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பலருக்கும் உடலில் லேசான காயம் மட்டுமே இருந்தபோதிலும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தேன். ஹெல்மெட் அணிந்து பயணத்தில் இருந்தால் தாங்களும் சிரமப்பட்டு குடும்பத்தினரையும் துன்பப்படுத்த வேண்டிய நிலைமை உருவாகி இருக்காது.

இதையெல்லாம் பார்த்த பின்னர் இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தைத் தொடுவதில்லை என உறுதியேற்றுள்ளேன். அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் ஒரு முறை தலைக்காய சிகிச்சை பிரிவுக்கு நேரில் சென்று பார்த்தாலே ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் முழுமையாகப் புரிந்துவிடும். ஹெல்மெட் அணியாமல் சென்ற எனக்கு துறை ரீதியான தண்டனை அளிக்காமல் இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த டிஐஜி சாருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என்கிறார்.

கொண்டாட்டம் நமக்கு… கழிவுகளை அகற்றும் சுமை இவர்களுக்கு! பிரித்துக் கொடுப்போம், பாரம் குறைப்போம்

ததீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் எனப் பலருக்கும் கொண்டாட்டம்தான்.ஆனால், அந்தக் கொண்டாட்டம் முடிந்த பிறகு வீதிகளில் தேங்கும் பட்டாசுக் கழிவுகளையும் மற்ற குப்பைகளையும் அகற்ற வேண்டிய பொற... மேலும் பார்க்க

`எங்கள் கொண்டாட்டம் கொஞ்சம் தாமதமாகத்தான்..'- நம் தீபாவளிக்கு பின்னால் இயங்கும் ஓய்வில்லா மனிதர்கள்!

நம் தீபாவளிக்குப் பின்னால்.. ஓய்வில்லாத மனிதர்கள்!தீபாவளி அன்று அதிகாலையில் எழுவது நமக்கு ஒரு கொண்டாட்டம். ஆனால், சிலருக்கு அதுவே வேலை நேரம்! நாம் வெடிக்கும் பட்டாசுகளின் சத்தத்துக்கு நடுவே நாளிதழ் வி... மேலும் பார்க்க

நெல்லை: குடும்பத்தின் வருகை; புத்தாடை, இனிப்பு – காப்பகத்தில் நெகிழ்ச்சியான தீபாவளி!

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், குடும்பத்தினருடன் கொண்டாட்டம் என மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால், குடும்பத்தைப் பிரிந்து காப்பகத்தில் வசிப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியை அனுபவ... மேலும் பார்க்க

`அவங்க முகத்துல வர சந்தோசம்தான்.!' - உடைந்த சிலைக்களுக்கு புத்துயிர் ஊட்டும் கலைஞர்

ஒன்று உடைந்துவிட்டால், தூக்கி எறிந்துவிட்டு இன்னொன்றை தேடிச் செல்லும் காலத்தின் ஓட்டத்தில், உடைந்த சிலைகளுக்கும் புத்துயிர் ஊட்டி வருகிறார் கந்தன் (46). சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள இவர... மேலும் பார்க்க

வெடியை மறந்த கிராமம்: பறவைகளுக்காக 50 ஆண்டு தியாகம் - இனிப்பு கொடுத்து வனத்துறை நெகிழ்ச்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ளது கொல்லுக்குடிப்பட்டி கிராமம். இங்குள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரத... மேலும் பார்க்க

சாலையில் கிடந்த 2 பவுன் நகை; காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவனுக்குப் குவியும் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 13). இவர் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.2 பவுன் தங்க நகைகள்மாணவன... மேலும் பார்க்க