செய்திகள் :

நெல் உலர்த்தும் நவீன இயந்திரங்கள் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

post image

ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை நேரங்களில் ஏற்படும் பருவம் தவறிய திடீர் மழையினால், விவசாயிகள் கடும் துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைப் பாதுகாக்கப் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி, விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த சோகக் கதை, நீடித்துக் கொண்டே இருக்கிறது.

நெல்லைக் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதிக்கக்கூடிய ஈரப்பத உச்சவரம்புக் கட்டுப்பாடு என்பது பெரும் தலைவலியாக உள்ளது. ஒவ்வொரு பருவத்தின்போதும் ஈரப்பத உச்சவரம்பை உயர்த்தும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

இவ்வாறான பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுப்பதற்குத் தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து அல்லது நபார்டு (NABARD) நிதி உதவியுடன், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர்த்தும் நவீன இயந்திரங்கள் மற்றும் நெல் உலர்த்தும் உயரமான களங்கள் அமைக்க வேண்டும். அதற்கு, நம் ஆட்சியாளர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மிகவும் அவசியமான இந்த அடிப்படை வசதிகளை அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் முழு வீச்சில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

ஆட்சியாளர்கள் உடனே வழக்கம்போல், ‘தமிழக அரசின் கஜானாவில் போதுமான பணம் இல்லை’ எனப் புலம்பக் கூடாது. ஒருவேளை, உண்மையாகவே தமிழக அரசிடம் இதற்கு நிதி இல்லையென்றால், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யவுள்ள சுமார் 1,200 கோடி ரூபாய் நிதியைத் திருப்பிவிட்டு, நெல் உலர்த்தும் நவீன இயந்திரங்கள் வாங்குவதற்கும், நெல் உலர்த்தும் களங்கள் அமைத்திடவும் பயன்படுத்த வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு கொஞ்சமும் அலட்சியம் காட்டாமல், அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!

- ஆசிரியர்

``எடப்பாடிக்கான ரிட்டையர்மெண்ட் நேரம் தொடங்கிவிட்டது" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல். ஆரம்பத்தில் தாராபுரத்தில் டஃப் கொடுத்த ஆதிமுக 6, 7-வது சுற்றுகள... மேலும் பார்க்க

``ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்: இப்போதான் புதின்கிட்ட பேசினேன்" - அதிபர் ட்ரம்ப் தகவல்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிராக ஈரான் மீதும், உக்ரைன் மீதான் தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா மீதும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா ... மேலும் பார்க்க

சேலம் : மதுராந்தகம் தாராபுரம் வெற்றியை பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடிய தவெக வினர்

சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்சேலத்தில் தவெக இ... மேலும் பார்க்க

``இந்தியப் பிரதமர் அம்பானி அவர்களே... என்னை மன்னித்துவிடுங்கள்" - சீண்டும் எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்குவதற்காக முயன்று வருகிறது. 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றிருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்த... மேலும் பார்க்க

Navi Pillay: நோபல் அங்கீகாரத்துக்குப் பின்னால், இனவெறியை எதிர்த்த நவநீதம் பிள்ளையின் போராட்ட வரலாறு!

இனத்தின் அடிப்படையில் மனிதர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில், நீதிமன்றத்தைத் தனது போராட்டக் களமாக மாற்றியவர் நவநீதம் பிள்ளை. தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகத் தொடங்கிய அவரது பயணம், சர்வ... மேலும் பார்க்க