செய்திகள் :

'பணமா? ரூ.50, UPI பேமென்டா? ரூ.51' - எஸ்கேப் ரூட்டில் வியாபாரிகள்; MDR-ல் மாட்டும் கஸ்டமர்கள்?

post image

உத்தரப்பிரதேசத்தின் காசிபாத் கடை வாசல்களில் கடந்த வார இறுதியில் சில நோட்டீஸ்கள் தொங்கியிருந்தன.

‘UPI பேமென்ட்கள் இங்கு கூடாது’.

‘பானிபூரி: பணம் - ரூ.50; UPI - 51’.

இது MDR அறிமுகப்படுத்தியதும் எதிர்பார்த்த ஒன்றுதான்.

MDR என்றால்...

Merchant Discount Rate - இதை அக்டோபர் 15-ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இதன் படி, மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் UPI பேமென்ட் பெறும் வியாபாரிகளுக்கு, அவர்கள் பெறும் ஒவ்வொரு பேமென்டிற்கும் 0.4 சதவீதம் கட்டணமாகப் பிடிக்கப்படுவதுதான் MDR.

காசிபாத் - நோட்டீஸ்
காசிபாத் - நோட்டீஸ்

மத்திய அரசு கூறியதன் படி, ரூ.2,000-க்கும் குறைவான பேமென்ட்கள், மாதத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக UPI பேமென்ட் பெறும் வியாபாரிகள், இரண்டு தனிநபர்களுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் கிடையாது.

MDR என்பது மத்திய அரசு வசூலிக்கும் வரியோ, கட்டணமோ இல்லை. அது UPI பேமென்டை எளிமைப்படுத்தும் வங்கிகள், பேமென்ட் சேவை வழங்குநர்களுக்கான கட்டணம் என்று விளக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, இந்தக் கட்டணத்தை வியாபாரிகள், பிசினஸ்கள் கஸ்டமர்களிடமிருந்து பெறக்கூடாது. தாங்கள்தான் கட்ட வேண்டும். இது சரியாக நடக்கிறதா என்பதை வங்கிகள் கண்காணிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

என்ன பிரச்னை?

இந்த MDR-ஐ அறிமுகப்படுத்தியதுமே இந்தக் கட்டணம் கஸ்டமர்களின் தலையில்தான் விழும் என்று பல எதிர்ப்புகள் எழுந்தன.

ஆனால், அப்படி நடக்காது என்று மத்திய அரசு எவ்வளவோ சாதித்தது.

ஆனால், இப்போது என்ன நடக்கும் என்று காசிபாத் கடைகள் இந்தியாவிற்குப் பாடம் எடுத்துவிட்டது.

நேற்று காசிபாத்தில் தொங்கிய நோட்டீஸ்கள், இன்று இந்தியா முழுக்கப் பரவலாம்.

யு.பி.ஐ பரிவர்த்தனை | UPI
யு.பி.ஐ பரிவர்த்தனை | UPI

பெரிய பெரிய தொகைகள் ஒரே கணக்கிற்கு வந்தும், சரியான வருமான வரிக் கட்டாத பலர் இந்த MDR மூலம் சிக்கலாம். UPI சேவை வழங்குநர்களுக்கு இது சரியான கட்டணத்தைச் சென்று சேர்க்கும் என்று MDR-ஐ சரி என்று நிரூபிக்க 1008 காரணங்கள் சொல்லலாம்.

எந்தவொரு வியாபாரியும், பிசினஸும் இந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்காது. இதனால், பணப் பரிவர்த்தனைகள் மீண்டும் அதிகமாகும்.

மெல்ல மெல்லத் தொடங்கி ஸ்டெடியான டிஜிட்டல் இந்தியா இப்போது காணாமல் கூடப் போகலாம்.

காணாமல் போகும் டிஜிட்டல் இந்தியா?

பணப் பரிவர்த்தனைகள் அதிகமாகும்போது, எந்தக் கருப்புப் பணம், ஊழல், லஞ்சம் என்று டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதோ, அந்த இலக்கே இல்லாமல் போகலாம்.

இதையும் மீறி UPI பேமென்ட்கள் நடந்தால், அந்தக் கட்டணம் நிச்சயம் கஸ்டமர்களிடம்தான் வசூலிக்கப்படும். இதற்குக் காசிபாத் தான் நல்ல உதாரணம்.

வியாபாரி எப்போதுமே பணம் விஷயத்தில் வியாபாரியாகத்தான் இருப்பார்... அப்படி தான் அவர்கள் இருக்க முடியும்.

இந்த மாதிரியான நடைமுறைகளில் அரசாங்கம் அரசாங்கமாகவே இருக்கும்.

சரியான நடைமுறை, நடவடிக்கை இல்லாமல் அமல்படுத்தப்படும் மாற்றங்களில் கடைசியில் பாதிக்கப்படுவது என்னவோ கஸ்டமர்கள்தான்.!

ஜெம் வீரமணி வழக்கு: "திமுக-வும், தவெக-வும் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல்..!"- வானதி சீனிவாசன்

"ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருப... மேலும் பார்க்க

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர்... மேலும் பார்க்க

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கு... மேலும் பார்க்க

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, `... மேலும் பார்க்க

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.... மேலும் பார்க்க