செய்திகள் :

"பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா? மீண்டும் தவறான முடிவு..!" - அன்புமணி ராமதாஸ்

post image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அண்ணா சாலையில் பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் செய்திகள் உண்மையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் செய்தி உண்மையெனில், அதைவிட பல மடங்கு தவறானது.

விஜய்
விஜய்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படக் கூடாது என்பதற்கு எவ்வளவு காரணங்களும், நியாயங்களும் உள்ளனவோ, அதை விட 100 மடங்கு அதிக நியாயங்களும், காரணங்களும் பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படக் கூடாது என்பதற்கு உள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களை பட்டியலிட்டால், அதில் முதல் 3 இடங்களில் பல்லவன் இல்லம் அமைந்துள்ள பகுதி இடம் பிடிக்கும். சென்னையின் முதன்மைச் சாலையான அண்ணா சாலை ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அதன்பின் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவே முடியாது.

அதுமட்டுமின்றி, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட இடத்தின் மொத்தப்பரப்பு 26.26 ஏக்கர் ஆகும். கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த 2007&ஆம் ஆண்டு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 39.54 ஏக்கர் ஆகும். அதில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகமாக கட்டப்பட்டு, இப்போது ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் கட்டிடங்கள் அமைந்துள்ள நிலப்பகுதி மட்டும் 19.48 ஏக்கர் ஆகும். ஆனால், இப்போது புதிய தலைமைச் செயலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட பல்லவன் இல்லத்தின் மொத்தப்பரப்பளவே 13.22 ஏக்கர் மட்டும் தான்.

விஜய், அன்புமணி, சௌமியா

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் கூட, இன்றைய நிலையில் அது போதிய இட வசதி இல்லாததாகவும், நெருக்கடி மிகுந்ததாகவும் தான் இருந்திருக்கும். அதேபோல், பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்ட 26.36 ஏக்கரும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு போதுமானதாக இருக்காது என்பது என்பது தான் நகரமைப்பு வல்லுனர்களின் கருத்து ஆகும். அவ்வாறு இருக்கும் போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அடையாளம் காணப்பட்டதில் மூன்றில் ஒரு பங்கும், பட்டினப்பாக்கத்தில் அடையாளம் காணப்பட்டதை விட பாதியளவும் மட்டுமே கொண்ட பல்லவன் இல்லத்தில் எவ்வாறு நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகம் கட்ட முடியும்?

மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள பல்லவன் இல்லம், கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அங்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அது சுற்றுச் சூழலை பாதிப்பதுடன், வெள்ள ஆபத்து ஏற்படுவதற்கும் வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, பல்லவன் இல்லத்தின் தெற்கில் அண்ணா சாலை, கிழக்கில் பல்லவன் சாலை, மேற்கில் கூவம் ஆறு, வடக்கில் புனித மேரி போர்வீரர்கள் கல்லறை மற்றும் பாடிகார்ட் முனீஸ்வரர் ஆலயம் ஆகியவை இருப்பதால் எதிர்காலத்தில் புதிய தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய நினைத்தால் கூட அது சாத்தியமாகாது.

பாமக மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட தேவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது என்பதும், அந்தத் தேவையை நிறைவேற்ற புதியத் தலைமைச் செயலகம் விரைவாக கட்டப்பட வேண்டும் என்பதும் தான். அந்த வகையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், அது தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, பரந்து விரிந்த நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு ஆகும்.

சட்டப்பேரவையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் மட்டுமின்றி, பல்லவன் இல்லமும் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. அதனால் தான் சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. அதை விடுத்து முதலில் பட்டினப்பாக்கம், அதற்கு எதிர்ப்பு எழுந்த பின் பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலத்தை அமைக்க திட்டமிடுவதன் மூலம் தமிழ்நாடு அரசு மீண்டும், மீண்டும் தவறு செய்து வருகிறது.

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு திறந்த மனதுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட வேண்டும். அதற்காக, பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே யோசனை தெரிவித்தவாறு, சென்னைக்கு வெளியில் புதிய தலைமைச் செயலகத்தை கட்ட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

செஞ்சி சிறுமி மாயம்: “பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என்றவரின் பதில் என்ன?”- விஜய்க்கு கனிமொழி கேள்வி

பெருந்துறை செவிலியர் மற்றும் செஞ்சி சிறுமி சம்பவங்களைக் குறிப்பிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..."பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்க... மேலும் பார்க்க

"தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க"- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்?

'நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு' என்ற டைட்டில் சாங் மூலம் ஓட்டுகளை அள்ளி சந்தித்த முதல் தேர்தலிலேயே முதல்வராகி விட்டார் ஜோசப் விஜய்.தேர்தலுக்கு வரும் போதும் சரி, தேர்தலில் வென்ற பிறகும் சரி தவெகவின்... மேலும் பார்க்க

இந்தியாவில் மார்கோ ரூபியோ! இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் விரைவில்?! ரூபியோ சொல்லும் தகவல் என்ன?

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு, அமெரிக்காவின் வரி நடவடிக்கைகளில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிப்பது தொடர்பான நடவடிக்கைக்கு அமெரிக்கா 60 ... மேலும் பார்க்க

'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீ... மேலும் பார்க்க

’சமூக விரோதிகள் ஆளுங்கட்சியை கேடயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்’ - அண்ணாமலை வலியுறுத்தல்!

கோவையில் ’வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் கல்வித்திறன் மற்றும் கற்றல் திறன் குறைந்து வருகிறது. குழந்தைகள் அதிக மொழிகளைக் க... மேலும் பார்க்க

'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! - மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 16-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு > அரசு, உள்ளாட்சி ... மேலும் பார்க்க