செய்திகள் :

’பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வாங்கியதில் ஊழலா?’ - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

post image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்ததில் தவறு நடந்திருப்பது 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம். உண்மைத் தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். யாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்குத் தரமான சைக்கிள் வழங்க வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை. மாணவ-மாணவிகள் விரும்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உறுதித்தன்மையும் சிறப்பான வசதிகளும் கொண்ட சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் 300 கோடி ரூபாய் டெண்டர் சப்ளை செய்யத் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு வழங்குவதுதான் உரிய நடைமுறை. நாம் ஒரு பட்ஜெட்டை வைத்துள்ளோம். சில நண்பர்கள் யார் சொல்லிப் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. முதல்வரின் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட தொகையில்தான் இவை நடைபெறும். அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் என்ன வேண்டுமானாலும் வரலாம். விற்பனை ஆகாத பிராண்டுகளைக்கூட விலை குறைத்துக் காட்டுவார்கள். கடந்த முறை வாங்கிய விலையை விடக் குறைவான விலையில்தான் தற்போது வாங்கப்படுகிறது" என்றார்.

ரேஷன் அரிசி கடத்தல்; தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி சர்வதேச வீராங்கனைமீது தாக்குதல் – பெண் கைது!

சிவகங்கை பையூர் சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், அரிசி கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி குடியிருப்போர் சங்கத் தலைவியும் சர்வதேச விளயாட்டு வீர... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: 'அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்'- அண்ணாமலை

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நி... மேலும் பார்க்க

நூலக நூல் கொள்முதல் ஊழல்: ``அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்..." - சிபிஎம் சண்முகம்

கோவை பெரியார் அறிவுலகம் நூலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் சிபிஎம் சண்முகம், இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்ப... மேலும் பார்க்க

"போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாத முத்திரை... தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?"- திமுக கேள்வி

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் ``அந்தத் தொகைக் கோடிக்கணக்கில் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோக... மேலும் பார்க்க

``வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" - கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

சென்னை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரத்த மஜ்ஜை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant) பிரிவிற்கு 'எக்ஸ்ட்ரா கார்போரியல் போட்டோபெரிசிஸ்' (Extracorporeal Photopheresis - ECP) என்ற அதி... மேலும் பார்க்க

"பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள்! உண்மையை வெளிக்கொண்டு வந்த பெருமாள் முருகன்" - சு.வெங்கடேசன்

கடந்த மாதம் கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இந்த நூலகத்திற்கான நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதியுள்... மேலும் பார்க்க