செய்திகள் :

`பழனிசாமி தான் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர்'- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு; அதிருப்தி குழுவின் நிலை?

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து இப்போது வரை அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் முடிந்தபாடில்லை.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக சந்திக்கும் பதினோறாவது தோல்வி இது.

இதனால், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்... இருக்கின்றனர்.

இரு அணிகள்

இந்த அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று இரு அணிகள் அதிமுக-விற்குள்ளேயே உருவாகின. இதில் சி.வி.சண்முகம் & டீம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதன்மை முகமாக முன்னிறுத்தியது.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

கடிதம்

சி.வி.சண்முகம் & டீம் விரைவில் பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஆனால், இதற்குப் பழனிசாமி செவிசாய்ப்பதாக இல்லை.

இதே நேரத்தில், தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் & டீம் தவெக-விற்குச் சாதகமாக வாக்களித்தது. இதன் பின், அதிமுக-வின் சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை முன்னிறுத்தி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கடிதத்தையும் அளித்தனர்.

புகார்

இதை எதிர்த்து இந்தக் கோரிக்கையை முன்வைத்த எம்.எல்.ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அரசுக் கொறடா மூலம் புகார் அளித்தார் பழனிசாமி.

இதனால் சி.வி.சண்முகம் தவிர்த்த சி.வி.சண்முகம் & டீம் பழனிசாமியுடன் சமாதானம் ஆகியது. ஆனாலும், இவர்களுக்குக் கட்சியில் உரிய பதவியை வழங்கவில்லை பழனிசாமி.

இதனால், மீண்டும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சண்முகம் & டீமாக மாறினர்.

ஜே.சி.டி. பிரபாகர்
ஜே.சி.டி. பிரபாகர்

அதிமுக-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்!

இன்றுகூட, சட்டமன்றத்திற்கு எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் இரு அணிகளும் தனித்தனியாகவே வந்தனர்.

இந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அதிமுக-வின் சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று இன்று அறிவித்துள்ளார்.

இதை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்... இவர்களில் சிலர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைய உள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன... என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க