செய்திகள் :

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க செயலி; தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு - விவரம் என்ன?

post image

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

மதுபானம்

இதற்காக 'எண்ட் டு எண்ட்' என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் மது பிரியர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் எங்கிருக்கின்றன, அங்கு என்னென்ன மது வகைகள் இருக்கின்றன மற்றும் அவற்றின் விலை என்ன என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும், பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான மது பாட்டிலைத் தேர்வுசெய்து 'Google Pay' போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்தியதும் அவர்களின் செல்போனுக்கு ஒரு 'கியூஆர்' குறியீடு அனுப்பப்படும்.

Google Pay
Google Pay

அதனை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பிக்கும் போது, ஊழியர்கள் அதைச் சரிபார்த்து உடனடியாய் மது பாட்டிலை வழங்கிவிடுவார்கள். இதனால் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

இந்தப் புதிய திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக மாவட்டந்தோறும் உள்ள சூப்பர்வைசர்களுக்கும், அதைத் தொடர்ந்து விற்பனையாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

’தவெக-வின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிகளின் காப்பி பேஸ்ட் பட்ஜெட்’ – வானதி சீனிவாசன் சாடல்

தவெக அரசின் பட்ஜெட் தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சி... மேலும் பார்க்க

"காவிரிக்காக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம் நாங்கள்; ஆனால் இந்த அரசு..!"- எடப்பாடி பழனிசாமி

தவெக அரசு தங்களது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது...லீக்கேஜ்"நிர்வாகத்தில் ந... மேலும் பார்க்க

`பழனிசாமி தான் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர்'- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு; அதிருப்தி குழுவின் நிலை?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து இப்போது வரை அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் முடிந்தபாடில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

பயன்படுத்த முடியாத நிலையில் பாரதியார் பல்கலைக்கழகப் பேருந்து நிறுத்தம்; சிரமப்படும் பயணிகள்!

கோவை – மருதமலை சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகேயுள்ள பேருந்து நிறுத்தம், போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால், மாணவர்கள், பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள... மேலும் பார்க்க

TN Budget 2026: சைக்கிள் டு லேப்டாப்; பள்ளி, உயர்கல்வித்துறைக்கான அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப... மேலும் பார்க்க

TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் - எந்தெந்தத்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப... மேலும் பார்க்க