செய்திகள் :

"பாசிசத்திற்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்" - 'இந்தியா' கூட்டணி பேரணியில் பங்கேறாத தவெகவைச் சாடிய ஆ.ராசா

post image

டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடந்த இந்தியா கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே, முதலமைச்சர்கள் வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவகுமார் மற்றும் பிற தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்தியா கூட்டணியின் இந்தப் பேரணியில் தவெக சார்பில் முதல்வர் விஜய்யோ அல்லது பிற தலைவர்களோ கலந்துகொள்ளவில்லை. இதனை திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 ஆ. ராசா
ஆ. ராசா

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், "‘வாக்குத் திருட்டு'க்கு எதிராக தலைநகரில் களமாடும் இந்தியா கூட்டணியில் 'தொடை நடுங்கி' வெற்றிக் கழகம் தடம் பதிக்கவில்லை! பாசிசத்திற்கு 'வாலாட்டும்' அப்படி ஒரு ராஜவிசுவாசம்! இருந்துவிட்டுப் போகட்டும். காலந்தோறும் மதச்சார்பின்மைக்கு 'காப்பிரைட்' கோரும் காங்கிரசுக்குமா சூனியமானது சுயமரியாதை? பாவம்-காந்தியும் நேருவும்தான் கலங்கி நிற்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Vijay: 'அடிக்கல் நாட்டு விழா முதல் திறப்பு விழா வரை' - முதல்வர் விஜய் புதுக்கோட்டை விசிட்! | Photos

"தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன" - ஸ்டாலின் குற்றச்சாட்டு மேலும் பார்க்க

ஓட்டுநர், நடத்துநர் கைகளைப் பிடித்து ரிப்பன் வெட்டிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் சுவாரஸ்யம்!

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பது, உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பது மற்றும் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிக... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துக்காக 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதில், எந்தவிதமான பணிகளும் மேற்கொ... மேலும் பார்க்க

'10 கோடி நிலமோசடி... முதல்வருக்கு மனு' - தவெக வேட்பாளரை அடைத்து வைத்ததன் பின்னணி என்ன?

நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றிருந்தார். அங்கே முதல்வரிடம் மனு கொடுக்க வந்திருந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளர் கே.எம்.சரீப்பை காவல்துறையினர் தடுத்து ஒரு அறை... மேலும் பார்க்க

கோவையில் நடைபெற்ற RSS பேரணி; முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு | Photo Album

கோவை ஆர்.எஸ்.எஸ் பேரணிகோவை ஆர்.எஸ்.எஸ் பேரணிகோவை ஆர்.எஸ்.எஸ் பேரணிகோவை ஆர்.எஸ்.எஸ் பேரணிகோவை ஆர்.எஸ்.எஸ் பேரணிகோவை ஆர்.எஸ்.எஸ் பேரணிகோவை ஆர்.எஸ்.எஸ் பேரணியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்க... மேலும் பார்க்க