செய்திகள் :

பிச்சை போட மறுத்த பெண்; மூக்கைக் கடித்து மூக்குத்தியைப் பறித்த யாசகர்; உத்தரப்பிரதேசத்தில் துணிகரம்

post image

மும்பை புறநகரில் உள்ள நவிமும்பை கோபர் கைர்னே என்ற இடத்தைச் சேர்ந்த மோனிகா ரெய்னா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவர்தனில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்கி இருந்து மத சடங்குகளில் பங்கேற்று வருகிறார்.

மோனிகா மதுராவில் உள்ள ராதாகுண்ட் அருகே உள்ள கோவர்தன் பரிக்ரமா வழித்தடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் யாசகம் கேட்டார். ஆனால் மோனிகா யாசகம் கொடுக்க மறுத்தார். இதனால் யாசகம் கேட்டவர் அந்தப் பெண்ணை புதருக்குள் தள்ளி, கழுத்தை நெரிக்க முயன்றார்.

அதோடு அப்பெண்ணின் மூக்கைக் கடித்து அவர் அணிந்திருந்த மூக்குத்தியை எடுத்துக்கொண்டு யாசகம் கேட்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக அப்பெண் போலீஸில் புகார் செய்தார்.

அப்பெண் கொடுத்துள்ள புகாரில், யாசகம் கேட்ட நபர் மாலை 5 மணியளவில் தன்னை அணுகி பணம் கேட்டதாகவும், கொடுக்க மறுத்ததால் தவறாக நடந்து கொண்டதாகவும், வழியில் தொடர்ந்து தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் தன்னை புதரில் தள்ளிவிட்டு, மூக்கைக் கடிக்கும் முன் கழுத்தை நெரிக்க முயன்றார் என்றார்.

மேலும் தப்பியோடும்போது மூக்குத்தியை எடுத்து சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அப்பகுதியில் உள்ள மற்ற பக்தர்கள் அந்தப் பெண்ணைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இது குறித்து மதுரா போலீஸ் அதிகாரி ஷ்லோக் குமார் கூறுகையில், “அந்தப் பெண் அந்தப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​அந்த நபர் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தொடர்ந்து நடந்து சென்றபோது, ​​அந்த நபர் அப்பெண்ணைத் தாக்கி மூக்கில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்படுகிறது. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்." என்று தெரிவித்தார்

theft
theft

சௌதி அரேபியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்; அரசின் நடவடிக்கை- திருச்சி வந்தடைந்த உடல்கள்!

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் மற்றும் கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் ஆகிய இரண்டு மீனவர்கள், கடந்த... மேலும் பார்க்க

சிவகங்கை: கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட இருவர்; 5 பேர் அதிரடி கைது!

சிவகங்கை அருகே செப்டம்பர் 16 அன்று 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.கொலை பின்னணிசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கு... மேலும் பார்க்க

பரிகார ரூமில் பள்ளி சீருடை, லேப்டாப் முழுக்க ஆபாச வீடியோக்கள்; சேலம் சாமியாரின் அதிர்ச்சிப் பின்னணி

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த 50 வயதான விஜயராஜா ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வந்திருக்கிறான்.‌‌ மேலும், சனீஸ்வரா பரிகார நிலையம் என்கிற பெயரில் போலியாக மாந்திரீக மைய... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு; கடித்துக் குதறி எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனை

வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, காதல் பறவைகள், புறாக்கள், அணில்கள், அலங்கார வண்ணமீன்கள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்கள். இவற்றில் குறிப்பாக நாய்கள் வீட்டுக் காவலுக்கும், பூனைகள் எலிகளைக் க... மேலும் பார்க்க

கடலூர்: `எது பெரியது?’ - விநாயகர் சிலை கரைப்பதில் மோதல்; விலக்கிவிடச் சென்றவர் உயிரிழந்ததால் பதற்றம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் என, பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. அதற்கு நிகராக அந்தச் சிலைகளால் சட்டம்... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு மருத்துவராக ஊதியம் பெற்றுக்கொண்டே PG படித்த பெண்; காங்கிரஸ் MLA உறவினருக்கு நோட்டீஸ்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில் இயங்கி வருகிறது கர்நாடக அரசின் 'நம்ம கிளினிக்' மருத்துவமனை. இந்தக் கிளினிக்கில் மருத்துவராக அங்கிதா யாராகல் என்ற பெண் பணியாற்றியிருக்கிறார். இவர் ... மேலும் பார்க்க