செய்திகள் :

பினராயி விஜயன் மீது விஜிலென்ஸ் வழக்கு - தீவிரமடையும் விசாரணை; FIR-ல் உள்ளது என்ன?

post image

கேரள மாநிலம் ​கொச்சியைச் சேர்ந்த தனியார் கனிம நிறுவனமான சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கும், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதில், வீணா மூலமாக முதலமைச்சர் பினராயி விஜயன் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து ரூ.3.28 கோடி லஞ்சமாகப் பெற்றார் என்பதும், இந்த லஞ்சப் பணத்தை பினராயி விஜயனின் மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ், வீணா மற்றும் தங்களது நண்பர்கள் மூலமாக துபாய்க்கு சட்டவிரோதமாகக் கடத்தினார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இதுகுறித்து விஜிலென்ஸ் வழக்குப்பதிவு செய்யுமாறு கேரள டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் 8-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தது. கேரள போலீஸ் விசாரணை நடத்திவந்த நிலையில், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் நேரடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி கே.எம். ஷாஜஹான் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையிலேயே அவர்கள் இருவர் மீதும் காவல்துறை நேரடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

வீணா, முஹம்மது ரியாஸ்

இதையடுத்து பினராயி விஜயன், அவரது மகள் வீணா,  மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் ஆகியோர்மீது விஜிலென்ஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பினராயி விஜயன் தனது அதிகாரப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, மகள் வழியாக சுமார் ரூ.3.28 கோடி லஞ்சமாக பெற்றுள்ளதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பினராயி விஜயன் முதல் குற்றவாளியாகவும், அவரது மகள் வீணா இரண்டாவது குற்றவாளியாகவும், சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் எக்சாலாஜிக் நிறுவனம், சி.எம்.ஆர்.எல் மேலாண் இயக்குநர் எஸ்.என். சசிதரன் கர்த்தா, பி. சுரேஷ் குமார், எம்.பவர் இந்தியா கேப்பிட்டல் லிமிடெட் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு ஹவாலா பரிவர்த்தனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றொரு தனி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இதில் பினராயி விஜயனின் மருமகனும், முன்னாள் அமைச்சருமான பி.ஏ. முகமது ரியாஸ் முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி வீணா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். முகம்மது ரியாஸ் அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை, கூட்டாளிகளுடன் இணைந்து துபாய்க்கு ஹவாலா மூலம் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துபாயில் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் தொழில் தொடங்குவது என்ற பெயரில் போலி நிறுவனங்கள் வாயிலாக நிதி மாற்றப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக வீணா 2024-ம் ஆண்டில் தனியாகவும், முகமது ரியாஸுடன் இணைந்தும் துபாய்க்குச் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

முன்னதாக அமலாக்கத்துறை வீணாவின் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட கையெழுத்துக் குறிப்புகள் அடங்கிய 'ரெட் புக்' டைரியில் பல கோடி ரூபாய் ஹவாலா பரிவர்த்தனைகள் பற்றிய விரிவான கணக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஹவாலா பணப்பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பதற்காக ‘நம்மள் பேப்பூர் கோர் டீம்’ என்ற பெயரில் 16 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஷைஜால் முகமது, பி. நிகில், ஹசன் வாரிஸ், வி.பி. பைஜாஸ், எம். நந்துலால், சுபைர் கருவாம்பொயில் ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

​அதிகார துஷ்பிரயோகம், கூட்டுச் சதி, மோசடி மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு ஆகியவற்றிற்காக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்!

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் நாடுமுழுவதும் பெரும் விவாதமாகியிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாட்டில் வாக்க... மேலும் பார்க்க

``ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" - விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது.... மேலும் பார்க்க

``தலைமைச் செயலகத்தில் மின்வெட்டுக்கு காரணம் இதுதான்" - மின்வாரியம் விளக்கம்

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து மின்வெட்டு பிரச்னைகள் நீடிக்கின்றன. ஆரம்பத்தில் கிராமங்களில் தொடங்கிய மின்வெட்டு, நகரங்களுக்கும் நீண்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆய்வு செய்யும் இடங்கள், ம... மேலும் பார்க்க

"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 10ம் தேதி டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள... மேலும் பார்க்க

டெல்லி: `ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்குத் தடை' - மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

டெல்லியில் இதுவரை முதன்மைப் போராட்டக் களமாக இருந்த மத்திய டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனி போராட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படாது எனமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழுவின்... மேலும் பார்க்க

"இன்ஸ்டாவில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கப்படுகிறது"- மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், " தவெக அரசுக்கு எதிராக இன்ஸ்டாகிராம... மேலும் பார்க்க