செய்திகள் :

"பிரதமர்-உள்துறை அமைச்சர் கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்கள்! மறைக்க என்னென்னவோ..!" - காங்கிரஸ்

post image

சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அடிக்கடி மாற்றுவதைச் சாடி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இன்னொரு நாள், மீண்டும் ஒரு யு-டர்ன்.

தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் விடுபட்ட வாக்காளர்களைச் சேர்க்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் 7 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்குத் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது

இதன்மூலம், ஏ.எஸ்.டி.டி (ASDD - இடம் மாறியவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்கள்) என்ற பிரிவின் கீழ் தவறான முறையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் ஆணையம் தாமதமாக ஒப்புக்கொண்டுள்ளது.

சுமார் 13 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்துள்ள இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பும் ஆத்திரமும் கிளம்பியதை அடுத்து, தேர்தல் ஆணையம் அடுத்தடுத்துத் திருத்தங்களைச் செய்து வருகிறது.

‘வாக்கு திருட்டின்’ புதிய வடிவம் எஸ்.ஐ.ஆர்

ஒவ்வொரு புதிய உத்தரவும் ஒரு கேள்வியைத்தான் எழுப்புகிறது. ஒவ்வொரு இந்தியரையும் ஆளாக்கிய இந்த அதிகாரத்துவக் குழப்பத்தின் நோக்கம்தான் என்ன?

இந்தத் தொடர் விளக்கங்களும் திருத்தங்களும், அந்தத் தீய எண்ணம் கொண்ட பிரதமர்-உள்துறை அமைச்சர் கூட்டணியின் உண்மையான சதியைத் தோலுரித்துக் காட்டுகின்றன. அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டார்கள்!

எஸ்.ஐ.ஆர் என்பது ‘வாக்கு திருட்டின்’ புதிய வடிவமாகும். இப்போது அந்தத் திருட்டு அம்பலமானதால், தேர்தல் ஆணையமும் பிரதமர்-உள்துறை அமைச்சர் கூட்டாளிகளும் தங்களின் தடங்களை மறைக்க என்னென்னவோ செய்கிறார்கள்.

ஒவ்வொரு திருத்தமும் ஏற்கனவே தெளிவாகத் தெரிந்த ஒன்றை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

1. ஞானேஷ் குமார் உடனடியாக வெளியேற வேண்டும்!

2. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும்!”

பெரியார் அறிவுலகம் விவகாரம்: "நூலகத் துறையிலும் Party Fund! மாபெரும் அறிவுத் துரோகம்!" - அருண்ராஜ்

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட நூல்கள் இடம்பெற்றிருப்பதை எழுத்தாளர் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டியிருப்பது இப்போது தமிழ்நாடு முழுவது... மேலும் பார்க்க

`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' - செல்லூர் ராஜூ

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரா... மேலும் பார்க்க

டெல்லி காற்று மாசு பிரச்னை: `பயிர்கள் மட்டுமல்ல, ஆடம்பர கார்களும் காரணம்..!'- உச்ச நீதிமன்றம்

தீபாவளி வந்துவிட்டாலே, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மாசு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது. இது தீபாவளியையொட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில்,... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல்; தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி சர்வதேச வீராங்கனைமீது தாக்குதல் – பெண் கைது!

சிவகங்கை பையூர் சாலை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில், அரிசி கடத்தல் மற்றும் சமூகவிரோத செயல்களைத் தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி குடியிருப்போர் சங்கத் தலைவியும் சர்வதேச விளயாட்டு வீர... மேலும் பார்க்க