செய்திகள் :

பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் வெற்றி உறுதி; பாஜக பின்னடைவு; தற்போதைய நிலவரம் என்ன?

post image

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகப் பதவிவகித்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் தொகுதிகளுக்கு அறிவித்தபடி ஜூலை மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025

குறிப்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அபிஷேக் குமார் சின்ஹா என்பவர் போட்டியிட இருந்த நிலையில் அவர் குடும்ப காரணங்களைத் தெரிவித்து வாபஸ் பெற்றார். அவருக்கு மாற்றாக நீரஜ் குமார் சின்ஹா என்பவரை பா.ஜ.க களம் இறக்கியது.

பாங்கிபூர், பீகார்

பாங்கிபூர் பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது. இங்கிருந்து போட்டியிட்ட எந்தவொரு பா.ஜ.க வேட்பாளரும் இதுவரை தோல்வியடைந்ததில்லை. அதே நேரம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் தேர்தல் கள வருகையும் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் 34.30 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான 41.45 சதவீத வாக்குகளை விட ஏழு சதவீதத்திற்கும் குறைவாகும்.

பாங்கிபூர் இடைத்தேர்தல் முடிவுகளின் ஆரம்பக்கட்ட நிலவரப்படி, பா.ஜ.க-வின் நீரஜ் குமார் சின்ஹாவை விட 'ஜன் சுராஜ்' கட்சி வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் 862 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

அரசியல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கிஷோர், 21-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க வேட்பாளரை விட 42,169 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். மொத்தம் 31 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடும் கிஷோர், பா.ஜ.க-விடமிருந்து இத்தொகுதியைக் கைப்பற்றியிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது.

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு; தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழ... மேலும் பார்க்க

”பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின் சாடல்

விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தவறிய தவெக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் சட்டமன்ற எ... மேலும் பார்க்க

CWG 2026: 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் - 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்த இந்தியா!

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்றோடு (ஆகஸ்ட் 2 ) நிறைவடைத்துள்ளது. இப்போட்டி இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து 122 வீரர், வீராங்கனைகள்... மேலும் பார்க்க

"என் சர்டிபிகேட்டைக் காண்பிக்கிறேன்; பேரரசர் தன் டிகிரியைக் காட்டுவாரா?"- யாரைச் சொல்கிறார் அபிஜித்?

''டெல்லி மாணவர்கள் போராட்டத்தை வழிநடத்தி முன்னெடுத்த காக்ரோஜ் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அமெரிக்காவிற்குச் சென்று படிக்க பணம் எப்படி கிடைத்தது? அவர் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுதான் இந்த... மேலும் பார்க்க

கல் குவாரிகளால் கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து! -வெடிகளின் அதிர்வுகளை ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவட்டும் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 4 அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.ஆனாலும், அணு உலை ... மேலும் பார்க்க

'வாய் திறக்காத அமைச்சர்கள்; கண்ணாமூச்சி ஆடும் முதல்வர் விஜய்!' - தவெக அரசின் மேகதாது 'ரகசியம்'

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் என அத்தனை தரப்பினரும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்து மாநிலத்தின் உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்.டி.கே.சிவகும... மேலும் பார்க்க