செய்திகள் :

"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" - ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

post image

அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி – வருந்தும் சொந்த கிராம மக்கள்

இப்படியொரு தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி விகடன் தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம்.

அமைச்சர் ஜெகதீவரியின் சொந்த ஊரான பனைவிளையில் ஊர் மக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை அமைச்சரது உறவினர்கள் ‘இனி அது ஊர்க் கிணறு இல்ல, எங்களோடது’ எனச் சொன்னது குறித்த செய்தி.

விகடனில் செய்தி வெளியானதும் டிவி சேனல்கள் பல இந்தச் செய்தியை வெளியிட்டன. தொடர்ந்து விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. போலீஸ் அமைச்சர் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அந்த விவகாரம் அப்படியே அமுங்கியும் விட்டது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி

ஆனால் இந்த விவகாரம் குறித்து அப்போது மீடியாவில் பேட்டி அளித்த மாரிமுத்து குடும்பத்தினர் மீது அப்போதிருந்தே அமைச்சரது குடும்பத்தினர் வன்மத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரிமுத்துவுக்குச் சொந்தமான ஆடுகள் சில திடீர் திடீரென இறந்து வந்திருக்கின்றன.

முதலில் காரணம் தெரியாமல் இருந்திருக்கிறார் மாரிமுத்து. ஆனால் ஒரு கட்டத்தில் சுந்தரவேல் என்பவரும் அவரது மகன் ராஜகோபாலும் சேர்ந்தே மாரிமுத்துவின் ஆடுகளை அடித்துக் கொன்றதை சிலர் மூலம் தெரிந்து கொண்ட மாரிமுத்து தட்டார்மடம் போலீஸில் புகாரும் தந்திருக்கிறார்.

சுந்தரவேல் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிமுத்துவின் புகார்

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் பனைவிளைக்கு வந்து அமைச்சர் வீட்டுக்குச் சென்று விட்டு அப்படியே சென்று விட்டார்களாம்.

,மாரிமுத்துவிடம் பேசிய போது, ‘சம்பந்தப்பட்டவங்க யாருனு பெயரைக் குறிப்பிட்டுப் புகார் கொடுத்தும் கூட போலீசார் நியாயமா நடந்துக்க மாட்டேங்குறாங்க. அமைச்சர் தரப்புக்குச் சாதகமா செயல்படறாங்க. எனக்கு இதுவரை அஞ்சு ஆடுகள் இறந்திருக்கு. கிணறு விவகாரம் தொடர்பா ஊர்ல பலர் மீடியாவுல பேசினாங்க. என் மனைவியும் அதுல ஒருத்தர். அந்த ஒரு காரணத்துக்காக வாயில்லா ஜீவன்களைச் சாகடிச்சிருக்காங்க. போலீசாரும் இது மேல நடவடிக்கை எடுக்கலைன்னா நான் நியாயத்துக்கு எங்கதான் போறது’ எனக் குமுறுகிறார்.

`கோவை நூலக புத்தகங்களில் ஊழல்; முதல்வர், அமைச்சர்களுக்கும் பங்கா?' - நயினார் நாகேந்திரன் கேள்வி

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் ஆளுங்கட்சி இதுவரை எந... மேலும் பார்க்க

ஈரான் - அமெரிக்கா: `அதிகரிக்கும் பதற்றம்: தொடர்ந்து கேட்கும் வெடிகுண்டுச் சத்தம்' - என்ன நடக்கிறது?

ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளான கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் சனிக்கிழமை மாலை பயங்கர வெட... மேலும் பார்க்க

வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வடகோவை ரவுண்டானா; கோவை தீபாவளி கொண்டாட்டம்! - பருந்து பார்வை க்ளிக்ஸ்

வடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானாவடகோவை ரவுண்டானா மேலும் பார்க்க

190 குழந்தைகளின் மரணம்... மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை!

கடவுளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகப் பசியுடன் இருந்தால் சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்று கூறி, தன்னைப் பின்பற்றியவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் பட்டினி கிடக்கச் செய்த மதக்குழுத் தலைவருக்கு கெ... மேலும் பார்க்க

"சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?"- எடப்பாடி விமர்சனம்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர்... மேலும் பார்க்க

'சண்டியர்': பிடிவாத கமல்... பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! - கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அண்மையில் வெளியி... மேலும் பார்க்க