செய்திகள் :

புதிதாக மின் இணைப்பு பெற, இனி வீட்டுக்கு அதிகாரிகள் வரமாட்டார்களா? - ஆகஸ்ட் 28 முதல் புதிய நடைமுறை!

post image

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனைத்துத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி, ஆன்லைனில் புதிய மின்சார இணைப்புகள் பெறும் அனைவருக்குமே இனி நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படாது.

4 கிலோவாட் வரை மின்சார இணைப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேவையான ஆவணம் மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் GPS இருப்பிடக் குறியீடுகளைச் சரியாக ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும்.

இந்த இரண்டும் சரியாக இருந்தால், மின்பகிர்மானக் கழகம், GPS தகவல்களை GIS செயலி மூலம் சரிபார்த்து, நேரில் எந்தக் கள ஆய்வுமே இல்லாமல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுவிடும்.

மின் இணைப்பு
மின் இணைப்பு

ஆனால், முக்கியமாக ஆன்லைனில் பதிவேற்றப்படும் ஆவணங்கள் நகல் ஆவணங்களாக இருக்கக்கூடாது.

ஒருவேளை, ஆவணங்கள் சரிபார்ப்பிலோ, GPS சரிபார்ப்பிலோ ஏதேனும் குழப்பம் இருந்தால், நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கள ஆய்விற்குப் பிறகு, மீட்டர் பொருத்தும் போது, அப்போது அங்கே GPS பதிவு செய்யப்படும்.

ஆவணம், GPS சரிபார்ப்பின் போது, விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து மெசேஜ், மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த நடைமுறை வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க