செய்திகள் :

'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' - ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

post image

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இன்னும் ஆளுநர் அழைக்காததையடுத்து, புதிய ஆட்சி அமைவது குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது.

ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!

இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்". எனத் தெரிவித்துள்ளார்.

சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூற... மேலும் பார்க்க

'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!

தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளு... மேலும் பார்க்க

`தவெக ஆட்சியமைக்க ஆதரவு... திமுக-வுடன் உறவு!' - கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வதென்ன?

விஜய்யின் த.வெ.கவிற்கு ஆதரவு அளித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய ... மேலும் பார்க்க

"அதிமுக, திமுக கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து ஆட்சி அமைக்க..!" - சசிகலா காட்டம்

திமுக - அதிமுக கூட்டணி என்கிற பேச்சு கடந்த இரண்டு நாள்களாக எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட... மேலும் பார்க்க

விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! - ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேபி பதில்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடி வருகின்றது. இந்த நேரத்தில், ANI-க்குக் கொடுத்த பேட்டியில் மார்க்சி... மேலும் பார்க்க