செய்திகள் :

புதிய இந்தியாவின் விஸ்வரூப முகம்... மாணவ சக்திக்கு சல்யூட்!

post image

‘நீட்’ நுழைவுத்தேர்வில் நடக்கும் முறைகேடுகளைக் களைந்து, தேர்வுமுறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லி, ஜந்தர் மந்தரில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டம் மொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மருத்துவராகும் கனவோடு கடும் உழைப்பைச் செலுத்தி, நீட் தேர்வு எழுதிய சுமார் 22 லட்சம் மாணவர்களை, வினாத்தாள் கசிந்ததைக் காரணம் காட்டி மீண்டும் எழுத வைத்தது, உண்மையில் மிகப்பெரிய வன்முறை.

இந்தப் பதற்றத்திலும் மன உளைச்சலிலும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏற்றுக்கொள்ளவே முடியாத பேரிழப்பு.

2019-ம் ஆண்டிலிருந்தே நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதுதொடர்பாக வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனாலும், தேர்வுமுறையைச் சீரமைக்க மத்திய கல்வி அமைச்சகம் பெரிதாக கவனம் காட்ட வில்லை. அந்த அலட்சியத்துக்கு எதிராகத்தான் டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்கள் மாணவர்கள்.

ஆனால், `கலைந்து செல்லுங்கள்' என்ற ஒற்றை வரியைச் சொல்லி காவல்துறை மூலம் அவர்களைக் கலைக்க நினைத்தது அதிகாரத்தின் குரல். எதிர்வினையாக உலகமே திரும்பிப் பார்க்கும்படி விஸ்வரூபமெடுத்து நின்றது இளைஞர் படை. வெயிலிலும் மழையிலும் அவர்கள் நிற்கிறார்கள். தன்னெழுச்சியாக எண்ணிக்கை பெருகியபோதும், கூடாரம், முதலுதவி, ஒழுக்கம், வரம்பு மீறாத அறவழிப் போராட்டம் என தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்கிறார்கள். தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை பயமின்றி எதிர்கொள்கிறார்கள். மாணவர்களை அடைத்து அழைத்துச் சென்ற காவல் வாகனத்தின் முன் நின்று, ஒற்றைக் கையால் நிறுத்திய ரியா உட்பட, களத்தின் பல புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன.

கல்வி ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடங்கி, அரசியல் தலைவர்கள், நாடெங்கிலும் உள்ள செயற்பாட்டாளர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் எனப் பலரும் மாணவர்களின் குரலோடு இணைந்து கரம்கோத்து நிற்கிறார்கள். போராடுகிற பிள்ளை களுக்கு எங்கெங்கிருந்தோ உணவுகள் அனுப்புகிறார்கள். இந்தியாவெங்குமே இந்தப் போராட்டத்தின் அனல் படரத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஒற்றுமையும் உறுதியும், இறுதியில் பிரதமரை வாய்திறக்க வைத்திருக்கிறது. `நீட் வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள், புதிய சட்ட மசோதா (Anti-Paper Leak Bill) விரைவில் தாக்கல் செய்யப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். ஆயினும், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் உறுதியாக நிற்கிறார்கள்.

புதிய இந்தியாவின் முகத்தை உலகுக்குக் காட்டியிருக்கும் மாணவர்களுக்கு, சல்யூட்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

''டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை

டெல்லி மாணவர்கள் போரட்டம் குறித்து யூ டியூப் மூலம் கேரளத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான டி.ஜி.மோகன்தாஸ் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதில், "ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள நான்கு சதுர கிலோம... மேலும் பார்க்க

"ஈரானைக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்; அதனால், பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள்" - ட்ரம்ப் பேச்சு

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, கடுமையாக மோதிக்கொண்ட அமெரிக்காவும், ஈரானும் மூன்று நாள்களாகத் தாக்குதல்களை நிறுத்தியிருக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதால்தான் இந்தப் போர் நிறுத்... மேலும் பார்க்க

ஈரானுக்கு ரஷ்யா உதவுகிறதா? "நேரடியாக புதினிடமே கேட்பேன்" - உக்ரைனின் குற்றச்சாட்டு குறித்து ட்ரம்ப்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "வான்வெளி புகைப்படங்களை அனுப்பி ஈரானுக்கு ரஷ்யா போரில் உதவுகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார். ஜெலன்ஸ்கியின் கூற்று குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் கேள்வி கேட்கப்பட்டத... மேலும் பார்க்க

குமரி: கனிமவள லாரிகளுக்கு கட்டுப்பாட்டை நீக்கக் கோரி மறியல்; லாரி டிரைவர்கள் மீது கேரள போலீஸ் தடியடி

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்வதால் சாலை விபத்துக்கள் அதிகரித்தன. அதிவேக லாரிகளால் விபத்து மூலம் மரணங்கள் அதிகரித்ததால், கனிமவள லாரிகளுக்கு குமரி மாவ... மேலும் பார்க்க

நீட் விவகாரம்: `கடும் அமளி' – நாள் முழுவதும் ஒத்திவைப்பு!; நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

நாடாளுமன்றம்நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரம் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தன் எக்ஸ்... மேலும் பார்க்க

'ஜார்ஜ் கோட்டை அறையை காலி செய்யும் முதல்வர் விஜய்!' - காரணம் என்ன?

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தன்னுடைய அலுவலகத்தை மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்போது அரசே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.CM Vijayதலைமைச் செயலகத்தில் செய்ண்ட் ஜார்ஜ் ... மேலும் பார்க்க