செய்திகள் :

புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!

post image

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்
புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்

1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் போவதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளில் அரசு இறங்கியது.

இதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தை சுற்றியுள்ள 12 மீனவ கிராம மக்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி மீனவ கிராமத்தினர் போராட்டத்திலும் இறங்கினர். மேலும், குறிப்பிட்ட அந்த இடம் மீனவர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கான இடமென்றும் அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என்றும் போர்க்கொடி உயர்த்தினர்.

புதிய தலைமைச் செயலகம் - மீனவர்கள் போராட்டம்
புதிய தலைமைச் செயலகம் - மீனவர்கள் போராட்டம் (File Image)

இந்நிலையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு அரசு சார்பில் கிராமத்துக்கு ஒருவரை மட்டும் அழைத்ததாகவும், அழைப்பையும் கடிதம் வாயிலாக தெரிவிக்காமல் அலைபேசியில் அழைத்ததாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினார். கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு முறையாக அழைக்காமல் ரகசியமாக கூட்டத்தை நடத்தி முடிக்க நினைக்காமல், முறையாக கூட்டத்துக்கு அழைப்பு விடுங்கள் அப்போதுதான் கூட்டத்துக்கு வருவோம் என மீனவ சங்கத்தினர் அரசுக்கு கடிதம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து முறையான அழைப்போடு நாளை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் அலுவலகம் தரப்பில் மீனவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது வரைக்கும் கலெக்டர் அலுவலகம் தரப்பில் மீனவர்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

கலெக்டர் அலுவலகத்தை தொடர்புகொண்ட மீனவர்களிடம் 'அப்புறமா சொல்றோம்' என்று மட்டும் தகவல் சொல்லியிருக்கின்றனர். இந்த பதில் மீனவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 'முறையாக அழைப்பு விடுத்தால் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள தயாராகவே இருக்கிறோம். ஆனால், அரசு எங்களிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. அறிவித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்கிறது.

அலைக்கழித்து காலம் தாழ்த்தியெல்லாம் எங்களின் நிலைப்பாட்டை மாற்றிவிட முடியாது. புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிராக நாங்கள் உறுதியாக ஒற்றுமையாக இருக்கிறோம்' என்கின்றனர் மீனவர்கள். கருத்துக் கேட்புக் கூட்டத்தை முறையாக நடத்தத் திட்டமிடாமல் தள்ளிப்போட்டு ரத்து செய்ததை கண்டித்தும், பட்டினப்பாக்கத்தில் ஏன் தலைமைச் செயலகம் அமையக்கூடாது என்பதைப் பற்றியும் மீனவ சங்கத்தினர் நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கவிருக்கின்றனர்.

US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்... அமெரிக்க வரலாற்றில் புது மாற்றமா?

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சபாநாயகராக அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப... மேலும் பார்க்க

கேரளாவில் பிறந்தவர்.. இன்று லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர்! - அமெரிக்க அரசியலில் முத்திரை பதித்த நித்யா ராமன்

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் . தற்போதைய மேயர் கரேன் பாஸை தோற்கடித்து இந்த வெற்றியைப் பெற்றிருப்... மேலும் பார்க்க

'ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷன்; தயாராகும் எதிர்க்கட்சிகள்(?) அலர்ட் மோடில் முதல்வர் விஜய்?

சட்டமன்றத்தில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டி 6 மாதம் முடிவடையவிருக்கிறது. இந்நிலையில், மீண்டும் அரசியல் வட்டாரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷனை பற்றி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: நந்தி வாகனத்தில் ஏறி தூய்மைப் பணி; ஊழியர் சஸ்பெண்ட்; தீயணைப்புத் துறையினரும் வருத்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருக்கோயிலின் கோபுரங்களைச் சுத்தம் செய்து தருமாறு கோ... மேலும் பார்க்க

`லயோலா மணி புகார் கொடுத்திருக்கணும்; அமைச்சருக்கே விழிப்புணர்வு இல்லையா?'- வழக்கறிஞர் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா (01.11.2026) அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வன்னி அரசு, சி. விஜயலட்சுமி, சட்டமன்ற ... மேலும் பார்க்க

US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்

அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த... மேலும் பார்க்க