செய்திகள் :

புதுச்சேரி போலி மருந்து மோசடி: முக்கிய குற்றவாளியின் ஜாமீன் ரத்து; நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மத்திய தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளைத் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

போலி மருந்து தொழிற்சாலை
போலி மருந்து தொழிற்சாலை

இதையடுத்து சன் பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.200 கோடி மதிப்பிலான போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா உள்ளிட்ட 26 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

ராஜாவுக்கு பல்வேறு மாநிலங்களில் தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனின் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதனிடையே, ராஜா உள்ளிட்ட 26 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில், வழக்கை முடக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக ராஜாவை சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதுச்சேரியில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார்.

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு வழக்கு

இதையடுத்து, ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தரப்பில் புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜாமீன் நிபந்தனைகளின்படி ராஜா தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நிபந்தனைகளை மீறி சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ராஜா ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

திருச்சி ஆட்டோ மெக்கானிக் கொலை; மது போதையில் தம்பியே அண்ணனைக் கொலை செய்த கொடூரம்

திருச்சி மாநகரம், தென்னூர் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (வயது: 32). இவர், ஆட்டோ மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அசார் (வயது: 28) என்கிற சகோதரர் உள்ளார். அவர், மீன் கடையில்... மேலும் பார்க்க

திருமணம் செய்ய மறுத்த காதலன்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது காதலி எடுத்த விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் தனது தோழி ஒருவருடன் தங்கி இருந்தார். அப்பெண் அமராவதியைச் சேர்ந்த 34 வயது வாலிபரைக் கடந்த ப... மேலும் பார்க்க

வேறொருவருடன் நெருக்கம்; விஷம் கொடுத்து மாணவியை கொன்று `ஸ்கெட்ச்' போட்ட பேராசிரியர் சிக்கியது எப்படி?

தெலங்கானாவில் உள்ள நஸ்பூர் என்ற இடத்தில் இருக்கும் பால்டெக்னிக்கில் பேராசிரியராக இருப்பவர் நவீன் குமார். இவர் பணியாற்றிய பாலிடெக்னிக்கில் தந்திரா (20) என்ற மாணவி படித்து வந்தார். அவரும் நவீன் குமாரும்... மேலும் பார்க்க

ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி

குஜராத்தில் உள்ள சூரத்தில் ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை என்கிற சந்தை இருக்கிறது.அங்கே உள்ள 639-ம் எண் கடையில், கடந்த ஏப்ரல் மாதம் வினோத் பண்டிட் சாவ்லே கணக்காளராகச் சேர்ந்துள்ளார். ஆனால், அந்த வேலை அவரு... மேலும் பார்க்க

சாதி பாகுபாட்டால் IIT Bombay மாணவர் தற்கொலை; "அவனிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" - தந்தை

ஐ.ஐ.டி பாம்பேயில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சாஹில் வாகோடே.இரண்டாம் ஆண்டு மிட் செமஸ்டர் தேர்வின்போது, ChatGPT பயன்படுத்தி தேர்வறையில் பேராசிரியரிடம் இவர் மாட்டியதாகக் கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

தீய சக்தியை விரட்ட சடங்கு; பூசாரிகளைச் சுட்டுக்கொன்ற கணவன்; மனைவி, மகனுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது, ​​அவரது மனைவி பபிதா சிங் (32), பூசாரிகள் மகேந்திர பதக் (60) மற்றும் அகிலேஷ் மிஸ்ரா (50) ஆகிய இர... மேலும் பார்க்க