செய்திகள் :

மதுரை: ஆவின் பாலில் கெட்ட வாடை; பொங்கிய மக்கள்... என்னதான் பிரச்னை?!

post image

மதுரை ஆவின் மீண்டும் சர்ச்சையின் மையமாகியுள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாள்கள், ஆவின் நீல நிற பாக்கெட் பாலை காய்ச்சியபோது பிளாஸ்டிக் நெடி வீசுவதாக மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மக்கள் புகார் தெரிவித்தனர். மக்கள் யாரிடம் சொல்லி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என புரியாமல் தங்களுக்குள் பேசி அங்கலாய்த்தனர்.

இதுபற்றி ஆவின் சங்கத்தின் முன்னாள் ஊழியர் பழனிச்சாமி கூறுகையில், “நாளொன்றுக்கு 1.47 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மூலம் மதுரை ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் 1.47 லட்சம் லிட்டர் பாலை, 2.20 லட்ச லிட்டராக மாற்றி, அளவு வாரியாக 40 லட்சம் பால் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அப்படி கொள்முதல் செய்யப்படும் பாலை டேங்கர்களில் ஏற்றும்போது ஆய்வு செய்யும் பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளும், ஆவின் நிர்வாக அதிகாரிகளும் கைகோத்துக் கொண்டு குளறுபடியில் ஈடுபடுகிறார்கள்.

முத்து கார்த்திகேயன்



இதற்காக பால் பவுடரையும், வெண்ணெய்யையும் கலந்து கொழுப்புச் சத்தை ஏற்றுகிறார்கள். இதற்காகத்தான் அதிகாரிகள் சில டெக்னிக்குகளை செய்கிறார்கள். அதாவது, ஜவ்வரிசி போன்ற சில மாவுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களை கலந்து பாலின் எடையைக் கூட்டி விற்பனைக்கு தயார் செய்கின்றனர். 5 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் முறைகேடு நடந்து, பிரச்னையாக வெடித்தது. கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இந்த விவகாரம் மீண்டும் வெடித்திருக்கிறது. அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிர்ச்சி கிளப்பினார்.

மதுரை ஆவினைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரோ, ``பாலை கொள்முதல் செய்யும்போது பலகட்ட ஆய்வுகள் செய்வதைப் போல பால் நிரப்பும் பாக்கெட்டுகளை பர்சேஸ் செய்யும்போதும் சோதனை செய்வதில்லை. தொடர்ச்சியாக மூன்று நாள்களாக பாலானது கெட்ட வாடை வீசியதையடுத்து, `கெட்டுப் போன பாலை ஆய்வு செய்தோம், பாலில் பிரச்னை இல்லை. பிளாஸ்டிக் பாக்கெட்டில்தான்’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியென்றால், அந்த தரமற்ற பிளாஸ்டிக் பால் உறைகளை அதிகாரிகள் பரிசோதிக்காமல் எப்படி வாங்கினர்?” என்று கேள்வி எழுப்பினர்.


இதற்கு மதுரை ஆவின் நிறுவன மேலாளர் முத்து கார்த்திகேயனிடம் விளக்கம் கேட்டதற்கு, ``கடந்த வாரம் ஆவின் பாலில் கெட்டுப்போன வாடை வீசியதற்கு  காரணம் பிளாஸ்டிக் தான். இதனை நாங்கள் சம்பந்தப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனையில் உறுதி செய்துவிட்டோம். பாலை அடைக்கும் பிளாஸ்டிக் உறைகள் ஒரு ரோலானது 30 கிலோவாக வரும். இதில் சில ரோல்களில் நடுப்பகுதி தரம் குறைந்ததாக இருந்ததால், பிளாஸ்டிக் தீய்ந்து இந்த பிரச்னை வந்துவிட்டது" என்றார்.

ஆவின் மீதான சர்ச்சை எப்போதுதான் அடங்குமோ?

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க